தனுஷின் "கொல வெறி" பாடல் யூ டியூப்பில் ஒரு கோடிக்கும் அதிகமான ஹிட்டை தாண்டினாலும் தாண்டியது, மொழி கடந்து, நாடு கடந்து கொலை வெறி வேகத்தில் இப்பாடலை அந்தந்த மொழிகாரர்கள் தங்களது மொழியில்
'உல்டா' செய்து தங்களது பங்கிற்கு இன்னும் கூடுதலாக "கொல வெறி"யை ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பாலிவுட்டில் இந்தப் பாடலை அமிதாப் பச்சனின் மகன் நடிகர் அபிஷேக் பச்சன் பாடக்கூடும் எனத் தெரிகிறது. இதற்கு முன்னோட்டமாகத்தான் "கொல வெறி" பாடலுக்காக தனுஷை அமிதாப்பும், அபிஷேக்கும் ஏகமாக புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் போல.