யூ டியூப் மூலம் கல்வி கற்கலாம்!


பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்துகொள்ள, மாணவர்களுக்கு உதவுகிறது யூ டியூப் சேனல். ரவியும், கோகுலும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள். அன்று வகுப்பு முடிந்து இருவரும் ஒரே பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ரவி மிகவும் சோர்வாக இருந்தான். இன்று வகுப்பில் ஆசிரியர்
நடத்திய கணக்குப் பாடம் அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை. என்ன செய்வது?


கோகுலிடம் தன் பிரச்சினையை மெல்லச் சொன்னான். அதைக் கேட்ட கோகுல் வாய்விட்டுச் சிரித்தான்.


யூ டியூப் (You Tube) எஜுக்கேஷன் சேனல் வீடியோவைப் பார்த்தால் உனக்கு நன்றாகப் புரிந்துவிடும்” என்றான்.


யூ டியூப் எஜுக்கேஷன் சேனலா? கொஞ்சம் விளக்க முடியுமா?” என்றான் ரவி.


‘’கூகுள் நிறுவனம் யூ டியூப்பில் புதிதாக You tube Education, You tube Teacher, You tube Schools’ என்ற சேனல்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் புத்தகத்தில் படித்து, பாடங்களை மனப்பாடம் செய்யத் தேவையில்லை. வீடியோவில் முழு விவரங்களுடன் பாடத்தைப் பற்றி கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பார்த்தால் மட்டும் போதும். வெகு எளிதாகப் புரிந்துவிடுகிறது” என்றான் கோகுல்.


இதைப் பற்றித் தெரிந்துகொள்ள நாமும், யூ டியூப் சானலுக்குப் போவோமா?


You tube Education:
உங்களது பயாலஜி பாடத்தில் ஏராளமான வரைபடங்கள் இருக்கின்றன. அவற்றை நேரில் பார்க்க வேண்டுமா? உதாரணமாக, டைஜஸ்டிவ் சிஸ்டம் எனப்படும் உணவு செரிக்கும் முறை பற்றிய பாடத்தைப் படித்திருக்கிறோம். நாம் தினமும் சாப்பிடும் உணவு எப்படி ஜீரணம் ஆகிறது என்பதைப் பற்றி விளக்கும் பாடம் அது. வெறும் புத்தகத்தின் மூலம் நம் வயிற்றுக்குள் நடந்து கொண்டிருக்கும் வேலைகளைப் படித்தால் தெரிந்துகொள்ள முடியுமா? முடியாதுதானே. ஆனால், அதையே வீடியோ படமாகப் பார்க்கும்போது படிப்பதைவிட அதிகமான தாக்கம் நம்மிடம் ஏற்படும். கூடுதல் விவரங்களும் புரியும். வயிற்றுக்குள் நடைபெறும் மாற்றங்களை விளக்கும் அனிமேஷன் காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. டைஜஸ்டிவ் சிஸ்டம் பற்றிய படத்தைப் பார்த்தபிறகு, அதைப் பற்றி அப்படியே தேர்வில் எழுதிவிடலாம்.


இதைப் போலவே, போட்டோ-சிந்தசிஸ், அமீபா, வேதியியலில் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, கணிதத்தில் டிரிகோணாமெட்ரி என பல வீடியோக்கள் இருக்கின்றன. வகுப்பில் உங்கள் ஆசிரியர் நடத்திய பாடத்தில் சந்தேகமா? கவலையே வேண்டாம். யூ டியூப் எஜுக்கேஷன் சானலுக்குப் போய், சந்தேகமுள்ள தலைப்பை ‘Search’ செய்துபார்த்தால், அதில் நிறைய வீடியோக்கள் உங்களுக்குக் கிடைக்கும்.


உதாரணமாக பொருளாதாரப் பாடத்தில் Demand and Supply’  பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், You tube Education-Demand and Supply என டைப் செய்து Search கொடுக்க வேண்டும். இப்போது Demand and Supply பற்றி வெளிநாட்டுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்திய வீடியோக்கள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் சுலபமாகப் புரிந்து கொள்வதற்கான வழிகளும் அந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கும்.


You tube Education-ல் ஆரம்ப மற்றும் மேல்நிலைக் கல்வி, வாழ்நாள் கல்வி, பல்கலைக்கழகம் என மூன்று பிரிவுகள் உள்ளன. ஆரம்ப மற்றும் மேல்நிலைக் கல்வியில் வரலாறு, சமூக அறிவியல், மொழிகள், கணிதம், அறிவியல் என ஐந்து பாடங்களில் வீடியோக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். வாழ்நாள் கல்வியில், சாதனையாளர்களின் வரலாறுகளை அனிமேஷன் அல்லது படங்கள் மூலம் வீடியோக்களாக வெளியிட்டுள்ளார்கள்.


பல்கலைக்கழகம் என்ற பிரிவில் கலைகள், வணிகவியல், கல்வி, பொறியியல், வரலாறு, மனிதம், மொழிகள்,  சட்டம், கணிதம், மருத்துவம், அறிவியல், சமூக அறிவியல் என பல துறைகள் சம்பந்தமான வீடியோக்கள் இருக்கின்றன. இதன்மூலம் கல்லூரி மாணவர்கள் வீடியோவை Search செய்து பார்த்துக் கொள்ளலாம். ஐ.ஐ.டி.யில் வகுப்பறைகளில் நடத்தப்படும் பாடங்களின் வீடியோக்களும் இதில் இடம் பெற்றுள்ளன.


மாணவர்கள் இதைப் பயன்படுத்தும்போது  வீடியோக்களின் கீழே எந்தக் கருத்துரையும் வராது. Related Videos என்பதும் வராது. அப்படித் தேடினாலும் பாடங்கள் குறித்தான விடியோக்கள் மட்டுமே வரும். இதனால் வேறு ஏதேனும் விடியோக்களைப் பார்த்து மாணவர்களின் கவனம் சிதறாது.


You tube Schools சேனலில் பள்ளிகள் நேரடியாகப் பதிவு செய்துகொண்டு, தேவையான வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியும். அந்த வீடியோக்களை வகுப்பறையில் மாணவர்களுக்குப் போட்டுக் காண்பிக்கலாம். குறிப்பிட்ட பள்ளி நிர்வாகம், தங்களது பள்ளியின் வகுப்பறைகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை வீடியோவாக்கி,யு டியூப்பில் அப்லோடு செய்து கொள்ளலாம். இந்த வசதியை மாணவர்கள் பயன்படுத்த முடியாது.


You tube Teachers: புதிதாக ஏதேனும் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டு மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடம் நடத்தவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், You tube Teachers சானலுக்குப் போய், தங்களுக்கு சந்தேகமுள்ள பாடத்தின் தலைப்பை தட்டச்சு செய்து, மற்ற ஆசிரியர்கள் அந்தப் பாடத்தை நடத்துவதை வீடியோக்கள் மூலம் பார்த்து அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம்.


பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துவரும் மாணவர்கள், தங்களுக்கு எப்பொழுது சந்தேகம் ஏற்பட்டாலும் உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள யு டியூப் உதவிக்கரமாக இருக்கும்.


இந்தச் சேனல்களுக்கு சேவைக் கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.    கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் இதுபோன்ற சேனல்கள் மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்தான்!


இணையதள முகவரி:  www.youtube.com/education,  www.youtube.com/schools,  www.youtube.com/teachers
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget