மின்னணு சாதன உலகில் சிறந்த வரவேற்பினை பெற்று இருக்கிறது சோனி நிறுவனம். முன்னிலை வகிக்கும் சிறந்த மொபைல் நிறுவனங்களில் சோனி எரிக்சன் நிறுவனத்திற்கு நிச்சயம் ஒரு தனி இடம் இருக்கிறது. அடுத்த வாரம் நடக்க இருக்கும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் தனது புதிய படைப்புகளை மக்களின் கண் பார்வைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது சோனி எரிக்சன் நிறுவனம்.
இந்நிகழ்ச்சியில் ஒரு புதிய மியூசிக் பிளேயரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் சிறந்த தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சோனி எரிக்சனின் இந்த புதிய மியூசிக் பிளேயரின் மூலம் வாடிக்கையாளர்கள் அதிக வசதியினை பெறுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இது மட்டும் அல்லாமல் சோனி எரிக்சன் நிறுவனம் புதிய தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களையும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோவில் அறிமுகம் செய்ய போவதாக தெரிய வந்துள்ளது. இஎஸ்ஏடிஓ ப்ளாக் மூலம் சோனி எரிக்சன் நிறுவனத்தின் புதிய படைப்புகளின் விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நோசோமி மற்றும் நிபான் என்பவை தான் அந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த தகவல்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்த புதிய சோனி எரிக்சன் நோசோமி ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை தொழில் நுட்பம் கொண்டது. நோசோமி ஸ்மார்ட்போனுக்கு ஒப்பிட்டு பார்க்கையில் நிபான் ஸ்மார்ட்போனின் திரை அளவு குறைவாக இருக்கிறது. இந்த நிபான் ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை வசதியை கொண்டது.
நோசோமி ஸ்மார்ட்போனில் 12 மெகா பிக்ஸல் கேமரா உள்ளதால் சிறந்த புகைப்படங்களை எடுக்கவும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பெறவும் முடியும். 1080 பிக்ஸல் துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பெற இந்த கேமரா உதவும். ஆனால் நிபான் ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமரா தான் கொடுக்கப்பட்டுள்ளது.
நோசோமி ஸ்மார்ட்போனை விட குறைந்த பிக்ஸல் கேமராவை நிபான் பெற்றிருந்தாலும் சிறந்த புகைப்படத்தையே வழங்கும்.
நோசோமி ஸ்மார்ட்போன் 16ஜிபி வரை இன்டர்னல் மெமரியை பெற்றுள்ளது. அதே போல் இந்த ஸ்மார்ட்போனில் 32ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். நிபான் ஸ்மார்ட்போனில் 1ஜிபி வரை ரேம் வசதியும், 16ஜிபி வரை ரோம் வசதியும் உள்ளது.
அடுத்த வாரம் நடக்க இருக்கும் சிஇஎஸ் நிகழ்ச்சியில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அதிகாரப் பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றனர்.