செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனம் மூன்று செல்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்துமே டியூயல் சிம் (இரட்டை சிம்) கார்டு வசதி கொண்டவை. நோக்கியா ஆஷா 200, ஆஷா 300 மற்றும் எக்ஸ்2-02 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இளம் தலைமுறையினரைக்
கவர்வதற்காக பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தென் பிராந்திய சந்தைப் பிரிவு இயக்குநர் டி.எஸ். ஸ்ரீதர் தெரிவித்தார். இவை அனைத்துமே இணைய தொடர்பு, சமூக வலைத்தளங்கள் மற்றும் நுகர்வோர் விரும்பும் பல்வேறு வசதிகளைக் கொண்டது.
ஆஷா 200 செல்போன் குவார்டி கீ பேட் வசதியுடன் 2 மெகா பிக்ùஸல் கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிம் கார்டுகள் வைப்பதற்கென்று சிறப்பு வசதிகள் உள்ளன. இதில் அதிகபட்சம் 5 சிம் கார்டுகள் வரை வைத்துக் கொள்ள முடியும். இசையைக் கேட்பதற்கென ஒலிபெருக்கி, ஸ்டீரியோ எஃப்எம் வசதி, விருப்பமான பாடலை ரிங் டோனாக மாற்றும் வசதி, தொடர்ந்து 52 மணி நேரம் பாடல் கேட்கும் வசதி ஆகியன இதில் உள்ளன. இதன் விலை ரூ. 4,349.
ஆஷா 300 செல்போன், டச் ஸ்கிரீன் மற்றும் கீ பேட் வசதி கொண்டது. இது இசை பிரியர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இதில் 5 மெகா பிக்ùஸல் கேமரா உள்ளது சிறப்பம்சமாகும். 3-ஜி இன்டர்நெட் இணைப்பு உள்ளது. 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராஸசர் இருப்பது கூடுதல் அம்சம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 22 நாள் வரை நீடித்திருக்கும் பேட்டரி. தொடர்ந்து 7 மணி நேரம் பேசமுடியும். இதன் விலை ரூ. 7,409.
நோக்கியா எக்ஸ்2-02 செல்போனில் பாடல்களை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். எஃப்எம் ரேடியோ பாடல்களைப் பதிவு செய்யும் வசதி இதில் உள்ளது. சிவப்பு, வெள்ளி, ஆரஞ்சு, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது. விலை ரூ. 3,599.
இந்த மூன்று போன்களிலும் டிஆர்எம் இலவச பாடல் சேவையைப் பெறலாம்.