பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோகர் இயக்கத்தில், ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, பாகிஸ்தான் நடிகர் பவாத் கான்
ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில். இந்தப்படத்தில் பாக்., நடிகர் பவாத்கான் நடித்திருப்பதால் படத்தை திரையிட விடமாட்டோம் என எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் படம் ரிலீஸாகுமா...?, ஆகாதா...? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் ஐஸ்வர்யா-ரன்பீர் இடையேயான நெருக்கமான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே படத்தின் 2.5 நிமிட டிரைலரிலேயே இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்தது அமிதாப் குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது. மேலும் தொடர்ந்து அவர்கள் படத்தில் நெருக்கமாக நடித்திருந்த காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது பிலிம்பேர் மேகஸினின் அட்டை பக்கத்தில் ரன்பீர்-ஐஸ்வர்யா நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளியாகி மேலும் சூடேற்றியுள்ளது. பிலிம்பேர் பத்திரிகையின் அக்டோபர் மாத பிரதியின் அட்டைப் படத்தில் ரன்பீர், ஐஸ்வர்யா மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் உள்ளது. இதுதவிர மேகஸினின் உள்ளேயும் அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி உள்ளது.
ஒரு குழந்தைக்கு தாயான ஐஸ்வர்யா(43), தன்னை விட வயது குறைவான ரன்பீருடன் இவ்வளவு நெருக்கமாக நடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.