கம்பியூட்டர் ஆணா? பெண்ணா?

ஒரு கல்லூரி வகுப்பில் மாணவன் கேட்டான்; "கம்பியூட்டர் ஆண்பாலா? பெண்பாலா?

புத்திசாலியான ஆசிரியர் வகுப்பை இரண்டாக பிரித்தார். ஆண்கள் ஒரு பிரிவு, பெண்கள் ஒரு பிரிவு. அவர்களையே முடிவு செய்யும்படி சொன்னார். தங்களது வாதத்தை நிரூபிக்க நான்கு காரணங்கள் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்

ஆண்கள் பிரிவினர் கம்பியூட்டர் பெண்பால் என முடிவு செய்தனர். ஏனெனில்
1. அவைகளின் ஆழத்தை அவற்றை படைத்தவனன்றி யாராலும் புரிந்துகொள்ள முடியாது.
2. மற்ற கம்பியூட்டர்களுடன் அவை தொடர்புகொள்ளும் மொழி வேறு எவருக்கும் புரியாது.
3. மிகச் சிறிய விடயங்களை கூட, நீண்ட கால "மெமரி" யில் சேமித்து வைத்து, பிற்காலத்தில் தேவைப்படும் போது வெளிக்கொணரும் சக்தியுடையவை.
4. ஒன்றை வாங்கிய உடனேயே அதற்கு வேண்டிய இணைப்புக்களுக்காக உங்கள் சம்பளத்தில் பாதியை செலவழிக்க நேரும்.

பெண்கள் பிரிவினர், கம்பியூட்டர் ஆண்பால் என முடிவு செய்தனர். ஏனெனில்,
1. அவற்றைக் கொண்டு ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்றால் முதலில் அவற்றை உசுப்பிவிட (Turn On) வேண்டும்
2. அவற்றிடம் நிறைய டேட்டா (Data) இருக்கிறது.
3. அவை உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவுகின்றதாகக் கருதப்படுகின்றன. ஆனால், பாதி நேரம் அவையே பிரச்சினைகள்.
4. ஒன்றை வாங்கிய உடனேயே, இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்தால் அதைவிட நல்ல 'மாடல்' கிடைத்திருக்கும் என்ற உணர்வு ஏற்படுகின்றது.


பெண்கள் வெண்றார்கள்....
 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget