நாசாவின் ஆர்செனிக் பாக்டீரியா பற்றிய தகவலை ஏற்க விஞ்ஞானிகள் மறுப்பு

பூமியை தவிர வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன என நாசா விஞ்ஞானிகள் கருத்தரங்கில் அறிவித்திருந்தனர். மேலும் அவர்கள் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மோனோ ஏரியில் வாழும் பாக்டீரியா தனது டி.என்.ஏ. மூலக்கூறில் பாஸ்பரஸிற்கு பதிலாக ஆர்செனிக் என்ற நச்சு தன்மை வாய்ந்த பொருளை கொண்டு உயிர் வாழ்கிறது என கூறியிருந்தனர். இதனை மற்ற விஞ்ஞானிகள் ஏற்க மறுத்துள்ளனர். இது பற்றி அலெக்ஸ் பிராட்லி என்ற நுண்ணுயிரியியலாளர் கூறும்போது, பாக்டீரியாவின் டி.என்.ஏ. ஆர்செனிக் கலந்த நீரில் அமிழ்ந்து வைத்திருக்கும்போது, அது கண்டிப்பாக தன்னுள் பாஸ்பேட் பொருளை கொண்டிருக்கும் என கூறினார். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில், பாக்டீரியாவானது குறைந்த அளவிலான பாஸ்பேட் பொருளை தன்னுள் கொண்டு உயிர் வாழும் தன்மை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவ்வகை பாக்டீரியா இனங்கள் பல உள்ளன என்றும் கூறப்படுகிறது. பாக்டீரியா குறித்து கருத்தரங்கில் தகவல் வழங்கியிருந்தவர்களில் ஒருவரான ரொனால்ட் ஒரெம்லேண்ட் கூறும்போது, இந்த விவாதங்களுக்குள் தற்போது நாங்கள் நுழைய விரும்பவில்லை. நாங்கள் தெரிவித்த கருத்து தவறானால் மற்ற விஞ்ஞானிகள் எங்கள் கண்டுபிடிப்பை பற்றி ஆராய்ந்து தெளிவு பெற ஒரு உந்துசக்தியாக அது இருக்கும். நாங்கள் தெரிவித்தது சரி என்றால் எங்களுடன் போட்டியிடுபவர்கள் அதனை ஏற்று கொள்வார்கள். மேலும் இந்த விசயத்தில் அவர்கள் எங்களுக்கு உறுதுணையாகவும் இருப்பார்கள். அதற்காக நான் ஆவலாக உள்ளேன் என கூறினார்.
இது போன்ற தகவல்களை கூறுவது நாசா மையத்திற்கு புதிதல்ல. கடந்த 1996-ஆம் ஆண்டு, குறிப்பிட்ட ஒருவகை பாறையின் மீது வேற்று கிரகத்தில் வாழும் நுண்ணுயிர் படிவங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தது. புகைப்படங்களும் வெளியிடப்பட்டது. அது அப்போது பலராலும் விமர்சிக்கப்பட்டது. மேலும், அதிக வெப்பம் உண்டாகி அதனால் பாறை வெடித்து தாதுபொருள்கள் உற்பத்தியாகி இருக்கிறது. அது நுண்ணுயிர் படிவங்கள் என தவறாக கருதப்பட்டுள்ளது என்றும் விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget