அரேபிய குச்சி சிக்கன்

சிறு குழந்தைகள் லாலிபாப் குச்சி மிட்டாய் சாப்பிடுவதே அழகு தான். கோழி இறைச்சி துண்டுகளை, இதேபோல குச்சியில் செருகி சாப்பிட கொடுத்தால், ஆசையாய் குழந்தைகள் சாப்பிடுவர். காரம் இல்லாத அரேபிய குச்சி சிக்கன் செய்ய
தேவையானவை:
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
மிளகுப் பொடி - ஒரு ஸ்பூன்
கடுகுப் பொடி - ஒரு ஸ்பூன் (கடைகளில் கிடைக்கும்)
தயிர் - 50 மில்லி
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - அரை மூடி
எண்ணெய் - வதக்கும் அளவிற்கு
நீளமான குச்சி (சாஸ்டிக்) - இரண்டு (கடைகளில் கிடைக்கும்)

செய்முறை:சிக்கன், வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை ஒரே அளவான சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இவற்றுடன், மேற்குறிப்பிட்ட அனைத்து பொடி வகைகள், உப்பு, தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி லேசாக காயவிட வேண்டும்.நீளமான குச்சியில் சிக்கன், வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக செருகி, தோசைக்கல்லில் வேகவிட வேண்டும். சதுர துண்டுகளாக இருப்பதால், நான்கு பக்கமும் திருப்பி வேகவிட வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வெந்தபின், தக்காளி கெட்ச் அப் சேர்த்து சாப்பிட சுவையாக
இருக்கும். சற்றே காரம் வேண்டுமென விரும்புபவர்கள், மிளகுப் பொடியை கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்.
சமையல் நேரம்: ஊற வைக்கும் நேரம் தவிர 25 நிமிடங்கள்.:


 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget