அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் என்ற இடத்தை சேர்ந்த உயிரியியலாளர்கள் கடல் வாழ் உயிரினமான ஸ்குவிட் பற்றி ஆராய்ச்சி செய்தனர். அதில் குறைந்த அலைவரிசை கொண்ட ஒலி அலைகளை கேட்டு அதற்கேற்ப ஸ்குவிட்கள் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. மனிதன் சுமார் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை உள்ள ஒலி அலைகளை கேட்க இயலும். ஆனால் 500 ஹெர்ட்ஸ் வரை உள்ள ஒலியை மட்டுமே ஸ்குவிட்கள் கேட்க முடிவதால் சில சமயங்களில் டால்பின்கள் மற்றும் சில வகை திமிலங்களுக்கு இரையாகவும் நேரிடுகிறது. நகர்ந்து கொண்டே ஸ்குவிட்கள் ஒலிகளை உணர முடியும். அதன் மூளையின் அடிப்பகுதியில் ஹேர் செல்கள் அமைந்துள்ளன. இது ஒலியினை கண்டறிந்து உடனே தகவலாக மூளைக்கு அனுப்புகிறது. மனிதனின் காதுகளும் இதே போன்ற பணியினை செய்கின்றன. எனவே ஸ்குவிட் பற்றிய இந்த ஆராய்ச்சி மனிதன் தனது கேட்கும் திறன் இழப்பை தடுப்பது எப்படி என்பதற்கு விடை காண வழி வகுக்கும் என ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.