ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய வுடனேயே, கூகுள் மிக அருமையான ஒரு வசதியைத் தன் தளத்தில் கொடுத்தது. மக்கள் சிதறிப் போவது இத்தகைய சூழ்நிலையில் அதிகம் நடைபெறும் ஒரு நிகழ்வு என்பதால், அவர்களுக்கு இந்த தளத்தின் மூலம் உதவி அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒருவர், தான் தெரிந்த, தன் வசம் உள்ள, தொலைந்து போனவரைப் பற்றி, அவரைத் தேடுபவர்கள் அறிந்து கொள்ள தகவல்களைத் தரலாம்.
அதே போல, ஒருவரைத் தொலைத்து விட்டுத் தேடுபவர், தான் இன்ன அடையாளம், பெயர் உள்ளவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன் எனத் தகவல் தரலாம். இதன் மூலம் இருவகையினரும் உதவி பெற்று, தொலைந்தவர்களுக்கு உதவலாம்.
தங்கள் நண்பர்களையும் உறவினர் களையும் தேடிய பலர், இந்த தளம் குறித்துக் கேள்விப் பட்டு உடனே தகவல்களைத் தரத் தொடங்கினார்கள். சராசரியாக ஒவ்வொரு நிமிடத்திற்கும் நூறு பேரைப் பற்றிய தகவல்கள் வந்து விழுந்தன. ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன. சுனாமி தாக்கிய சென்டாய் என்ற பகுதியில் "Sato" என்ற பொதுப் பெயர் கொண்டவர்கள் அதிகம். இந்த பெயரில் மட்டும் பல நூற்றுக்கணக் கானவர்களைப் பற்றிய பதிவுகள் இருந்தன.
குண்டுஸான் என்பவர், சென்டாய் பகுதியில் பல் மருத்துவராகப் பணியாற்றிய அகி சாட்டோ என்பவரைத் தேடித் தகவல் கொடுத்து, புகைப் படத்தினையும் வெளியிட்டிருந்தார். பூகம்பத்திற்குப் பின், ஆனால் சுனாமி அலை வரும் முன் அவருடன் பேசியதாக வேறு குறிப்பிட்டிருந்தார். அவர் செய்தியைப் படிக்க பரிதாபமாக இருந்தது. இன்னொரு செய்தியில், பாட்டிமா சாட்டோ என்பவர், அம்மா நலம். வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார் என்று எழுதி இருந்தார். படிக்க நமக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் இந்த தளம் இயங்கியது. தள முகவரி: http://japan.personfinder. appspot.com/?lang=en. இந்த அரிய சேவையினை அனைத்துப் பிரிவினரும் பாராட்டினார்கள். பலரும் பயன்படுத்தி உதவி பெற்றனர்.
ஜப்பானில் இயங்கும் அகில உலக செஞ்சிலுவை சங்கத்தின் கிளையும் இதே போல ஒரு தளத்தைத் தயாரித்து வெளியிட்டிருந்தது.