கம்ப்யூட்டருக்குப் புதியவரா? இல்லீகல் ஆப்பரேஷன்

கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக் கையில் சற்றும் எதிர்பாராத வகையில் கீழே காணும் செய்தி திரையில் தோன்றி அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் சாப்ட்வேர் தொகுப்பை கட்டாயமாக நிறுத்தச் செய்திடும். 
"This program has preformed an illegal operation and will be shut down".
இது எதனால் ஏற்படுகிறது. இது பல காரணங்களாள் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலும் ஒரே நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு சாப்ட்வேர் தொகுப்புகளால் தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. பின்னணியில் இயங்கும் சாப்ட்வேர் தொகுப்பு ஒன்றின் ஏதாவது சில பைல்கள் நீங்கள் இயக்கும் சாப்ட்வேர் தொகுப்புடன் பிரச்னை செய்திடும்போது ஏதாவது ஒரு சாப்ட்வேர் இயங்க முடியாமல் முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே இது போன்ற சூழ்நிலையில் ஸ்டார்ட் பட்டன் அருகே உள்ள டாஸ்க் பாரில் அமர்ந்திருக்கும் புரோகிராம்களை மூடுவதன் மூலம் இந்த பிரச்னை தீரலாம். 
(மூடுவதற்கு அதனைத் திறக்க வேண்டியதில்லை. ரைட் கிளிக் செய்து அதில் உள்ள க்ளோஸ் பட்டனை அழுத்தினாலே போதும். இந்த வகையில் ரியல் ஆடியோ ப்ளேயர் இல்லாத சேட்டையெல்லாம் செய்து பல புரோகிராம்களை மூட வைக்கும்.) 
இந்நிலையில் CTRL-ALT-DEL கீகளையும் ஒரு சேர அழுத்தி விடை காணலாம். ஆனால் இதிலும் ஒரு ரிஸ்க் உள்ளது. சில நேரங்களில் கம்ப்யூட்டரையே நீங்கள் மூடிவிடும் சூழ்நிலை ஏற்படலாம். பின் பக்கமாக இயங்கும் அனைத்து புரோகிராம்களை மூடிய பின்னரும் பிரச்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் ட்ரைவர் புரோகிராம்களில் ஒன்று உங்களுக்குத் தொல்லை கொடுக்கிறது என்பது உறுதியாகிறது. இந்நிலையில் பிரச்னையைத் தீர்க்க கம்ப்யூட்டரை Safe Modeல் இயக்குவதுதான் வழியாகும். இதற்கு விண்டோஸ் பூட் ஆகி வரும்போது எப் 8 கீயை அழுத்த வேண்டும். இதனை விண்டோஸ் லோடிங் என வருமும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சேப் மோடில் கம்ப்யூட்டர் சரியாக இயங்கத் தொடங்கினால் உங்கள் ட்ரைவர்கள் புரோகிராம் அனைத்தையும் நீங்கள் மறுபடியும் புதிதாக இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டியதிருக்கும். 
இன்னொரு வழியாகவும் பிரச்னை வரலாம். நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் சாப்ட்வேர் தொகுப்பில் உள்ள பைல்கள் ஏதேனும் கெட்டுப் போயிருக்கலாம். இது உறுதியானால் அந்த சாப்ட்வேர் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்து பின்னர் மீண்டும் இண்ஸ்டால் செய்வது நல்லது. அதன்பின்னும் பிரச்னை வந்து கொண்டே இருந்தால் உங்களுக்கு சாப்ட்வேர் தொகுப்பு வழங்கிய கடைக்காரரை அணுகவும். அவரால் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்பது சந்தேகம் தான் என்றாலும் அவரிடம் ஏதாவது பிரச்னை தீர வழி இருக்கலாம். 
ஒவ்வொரு கம்ப்யூட்டரும் ஒரு மனிதன் போல. எந்த கம்ப்யூட்டரிலும் பிரச்னை செய்யாத புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் பிரச்னை செய்திடலாம். அந்த புரோகிராம் எழுதியவருக்கே அந்த பிரச்னையின் அடிப்படை தெரியாமல் இருக்கலாம். அப்போது உங்கள் கம்ப்யூட்டரின் செட் அப்பை புரோகிராம் எழுதியவர் பார்த்தால் ஒருவேளை பிரச்னையின் அடிப்படை தெரிய வரலாம். 
இல்லீகல் ஆப்பரேஷன் செய்தி வருகையில் மேலே கூறப்பட்ட அனைத்து வழிகளையும் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த செய்தி வந்தவுடன் அதிகம் பயப்படத் தேவையில்லை. பெரும்பாலும் அந்த சாப்ட்வேர் இயக்கத்தினை நிறுத்தி மீண்டும் இயக்கினாலே நிலமை சரியாகிவிடும். தொடர்ந்து இருந்தாலே மேலே கூறப்பட்ட வழிகளில் சிந்திக்க வேண்டும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget