யூசர் நேம்/பாஸ்வேர்ட் சரியா?

இணையத்தில் நுழைந்து நம் விருப்பமான வெப்சைட்டிற்குள் நுழைய, நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தருவோம். வழக்கமாக, உடனே இணைய தளம் திறக்கப்படும். நாம் நமக்குத் தேவையான தகவல்களைப் பெற முயற்சிப்போம். ஆனால், சில வேளைகளில் “Your Password or Username is Invalid. Please Try Again.” என்ற செய்தி வந்து நம் ஆசைத்தீயில் தண்ணீரை ஊற்றிவிடும். "அய்யோ! சரியாகத்தானே யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்டையும் அடித்தோம் என்ன வாயிற்று?' என்ற பதற்றம் பற்றிக் கொள்ளும். அந்த பதற்றத்திலேயே இன்னும் பல தவறுகளைச் செய்திடத் தொடங்குவோம். இன்டர்நெட் இணைப்பிற்காவது பரவாயில்லை; ட்ரெயின் டிக்கெட், பேங்க் அக்கவுண்ட் கையாளுதல், ஆன்லைனில் பொருட்கள் வாங்குதல் போன்றவற்றில் ஈடுபடுகையில் இந்த பிரச்னை வந்தால் நம் ரத்த அழுத்தம் இன்னும் எகிறும், இல்லையா? இந்த சூழ்நிலைக்கு நாம் தான் காரணம். எனவே இது போல லாக் இன் செய்திடுகையில் செய்யக் கூடாதவற்றையும் செய்ய வேண்டியவற்றையும் இங்கு காணலாம்.
செய்யக் கூடாதவை:
1. லாக் இன் செய்திடுகையில் "ஓகே' அல்லது "சப்மிட்' பட்டனை ஒரு முறை மட்டுமே தட்டவும். 
2.தட்டிய பின் மேற்கொண்டு எதுவும் செய்திடாமல் இருக்கவும். வேறு புரோகிராம்களுக்கான எந்தவிதமான செயல்பாடும்களையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. 
3.மவுஸைத் தட்டாமல் அல்லது அதைக் கொண்டு வேறு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. சிஸ்டம் உங்களை லாக் இன் செய்திடும் வரை பொறுமை காப்பது நல்லது. ஏதாவது செய்தால் நீங்கள் இன்டர்நெட்டிலிருந்து வெளியே தள்ளப்படலாம்.
4. வேறு ஸ்கிரீன், வேறு புரோகிராம், வேறு மெனு என்று எதற்கும் செல்ல வேண்டாம். 
5. ஏற்கனவே இருக்கும் புரோகிராம் மட்டுமின்றி புதிய புரோகிராம் எதனையும் திறக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். 
6. உங்கள் பாஸ்வேர்ட் அல்லது யூசர் நேம் எதனையும் காப்பி செய்து பேஸ்ட் செய்திடும் செயலை அறவே நிறுத்துங்கள். எத்தனை முறை அவற்றை டைப் செய்திட வேண்டியது இருந்தாலும் டைப் மட்டுமே செய்திடவும்.
செய்ய வேண்டியவை:
1. இன்டர்நெட்டில் அல்லது அதன் ஒரு தளத்தில் லாக் இன் செய்திடுகையில் இயங்கும் புரோகிராம் எண்ணிக்கையை கூடுமான அளவு குறைவாகவே இருக்கட்டும். நிறைய புரோகிராம்கள் இருப்பது உங்கள் இன்டர்நெட் லாக் இன் செயலில் நிறைய குறுக்கீடுகளை ஏற்படுத்தும். குறிப்பாக உங்கள் ராம் மெமரி குறைவான அளவில் இருந்தால் இன்னும் பல சிக்கல்கள் ஏற்படலாம். 
2. பென் டிரைவ் போன்ற சாதனங்களை இணைத்தல், மியூசிக் புரோகிராம்களை தொடங்குதல் போன்றவற்றை நீங்கள் லாக் இன் செய்திடும் வரை ஒத்தி போடவும்.
3. லாக் இன் செய்திடுகையில் முற்றுப் புள்ளி கீயினைப் பயன்படுத்தும் இடத்தில் கமா புள்ளியைப் பயன்படுத்த வில்லை என்பதனை உறுதிப் படுத்திக் கொள்ளவும். அதே போல பலரும் என் மற்றும் எம் (mn) கீகளை மாற்றி அமைத்து டைப் செய்வார்கள். எடுத்துக் காட்டாக அவசரத்தில் com என்பதற்குப் பதில் con என டைப் அடிப்பவர்கள் உண்டு. இது ஒரு மிகச் சிறிய தவறு தான் என்றாலும் நம் பணியைக் கெடுத்துவிடும் அல்லவா?
4. யூசர் நேம் டைப் செய்கையில் ட்ராப் பாக்ஸ் என்னும் விரியும் மெனு வசதி இருந்தால் ஏற்கனவே சரியான முறையில் டைப் செய்து லாக் இன் செய்தததைத் தேர்ந்தெடுத்து அமைத்திடவும். இது பிழைகளைத் தவிர்க்கும்.
5. அடுத்த அடுத்த கட்டங்களுக்குச் செல்ல மவுஸ் கர்சரைப் பயன்படுத்தவும். டேப் கீயைப் பயன்படுத்த வேண்டாம். 
6. எப்போதும் கீ போர்டில் உள்ள கேப்ஸ் லாக் கீ இயக்கப்படவில்லை என்பதனை லாக் இன் செய்திடும் முன் உறுதி செய்து கொள்ளுங்கள். பொதுவாக பெரும்பாலான லாக் இன் அக்கவுண்ட்கள் சிறிய பெரிய எழுத்துக்கேற்றபடி வேறுபடும். எனவே சரியான முறையில் நீங்கள் எழுத்துக்களை டைப் செய்திடுகிறீர்கள் என்பதனை உறுதி செய்திடவும்.
மேற்சொன்ன அனைத்து பாதுகாப்பு வழிகளையும் நீங்கள் பின்பற்றிய பின்னாலும் உங்களால் லாக் இன் செய்திட முடியவில்லை. இந்த கட்டுரையின் முதல் பாராவில் குறிப்பிட்ட பிழைச் செய்திதான் வருகிறது என்றால் லாக் இன் செய்திடும் முயற்சியை அப்போதைக்குக் கைவிட்டு விட்டு பின் சிறிது நேரம் கழித்து மேற்கொள்ளவும். அல்லது கம்ப்யூட்டரை ஒரு முறை ரீ ஸ்டார்ட் செய்து பின் லாக் இன் செய்திடவும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget