இரண்டு மவுஸ் கிளிக்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், சில விஷயங்கள் நமக்கு எந்த நேரமும் சிறந்த பயனைத் தரும் வகையில் இருக்கும். அவற்றில் ஒன்று, மவுஸ் கொண்டு கிளிக் செய்து டெக்ஸ்ட் தேர்ந்தெடுப்பது. பல வேர்ட் ப்ராசசர், இமெயில் டெக்ஸ்ட் எடிட்டர்கள், இணைய தளப் பக்கங்கள் ஆகியவற்றில் இந்த மவுஸ் கிளிக் பயன்பாடு நமக்குக் கிடைக்கிறது.
ஒரு குறிப்பிட்ட சொல் அல்லது வாக்கியத்தினை, பத்தியை அடிக்கோடிட, சாய்வெழுத்துக்களாக மாற்ற நாம் என்ன செய்கிறோம்? டெக்ஸ்ட்டை தேர்ந்தெடுக்க மவுஸ் கர்சர் அல்லது ஷிப்ட் கீயுடன் அம்புக் குறி கீயினைப் பயன்படுத்தி
அதனை ஹைலைட் செய்திடுகிறோம். 
இதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது ஒரு சொல் எனில், அதன் மீது எங்கேணும் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று இரு முறை கிளிக் செய்திடுங்கள். அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும். மூன்று முறை கிளிக் செய்திடுங்கள். அந்த பத்தி முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். 
இனி நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை எப்படி வேண்மானாலும் மாற்றிக் கொள்ளலாம். 


பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget