ஏலியன் அர்மெகட்டான் ஹாலிவுட் விமர்சனம்


வாரத்துக்கு மூன்று ஹாலிவுட் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இதில் எத்தனைப் படங்கள் லாபம் சம்பாதிக்கின்றன என்பது தெ‌ரியவில்லை. டப் செய்வதற்கான படங்களை போஸ்டரைப் பார்த்து தேர்வு செய்கிறார்களோ என்றொரு ஐயம் இருக்கிறது.
வேற்றுக்கிரகவாசிகள், அதிரடி ஆக்சன் இவைதாம் டப் செய்யப்படும் படங்களுக்கான அளவுகோல்.


இந்த வாரம் ஏலியன் அர்மெகட்டான் என்ற படம் வெளியாகிறது. 2011ல் அமெ‌ரிக்காவில் வெளியான படம் இது. 95 நிமிடங்கள் ஓடக் சுடிய இந்தப் படத்தின் கதை ரொம்பவே சிம்பிள். மகளைத் தேடி ஏ‌லியன் இருக்கும் இடத்துக்குப் போகிறார் தந்தை. இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸை அழித்து 870 ஆயிரம் டாலர்களை செலவு செய்திருக்கிறார்கள். ஹாலிவுட்டின் சூப்பர் ப்ளாப்களில் இதுவும் ஒன்று. பிறகெப்படி தெர்வு செய்தார்கள்?


நீல் ஜான்சன் கதை எழுதி இயக்கியிருக்கிறார். இவருக்கு இப்படிப்பட்ட வீடியோ கேம் படங்கள் மீதுதான் ஆர்வம் என்பதை இவரது பயோடேட்டா சொல்கிறது. இந்தப் படத்துக்கு முதலில் பேட்டில் கிரவுண்ட் லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற பெயரைதான் தேர்வு செய்திருந்தனர். பேட்டில் - எல்ஏ என்ற படம் வந்ததால் பெயரை மாற்றினார்கள்.


எப்படி எடுத்தாலும் பார்ப்போம் என்ற எதையும் தாங்கும் ரசிகர்களுக்கு மட்டுமேயான படம் இது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget