
உள்வாங்கப் பட்டு, அதனை டெக்ஸ்ட்டாக மாற்றலாம். இதற்கான இணைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் தயாரிக்கப்படத் தேவையானக் கட்டமைப்பை, இந்த பிரவுசரில் கூகுள் தந்துள்ளது. இதற்கான சிறிய டெமோ புரோகிராம் ஒன்றும் காட்டப்படுகிறது. இந்த டெமோ புரோகிராம், இதனை இன்ஸ்டால் செய்த பின்னர் கிடைக்கும். முப்பரிமாணக் காட்சிகள் காட்டு வதற்கான தொழில் நுட்பமும் இந்த பிரவுசரில் இணைக்கப் பட்டுள்ளது.