சில தளங்களுக்கு சென்றால் பின்னணியில் இசை ஒலிப்பதை கேட்கலாம். அது போன்று நமது தளத்திலும் ஆடியோ ஃபைல்களை இணைப்பது எப்படி? என்று இந்த பதிவில் காண்போம். அவ்வாறு இணைப்பதற்கு Embed என்ற முறை பயன்படுத்தப்படுகிறது.
*முதலில் உங்களுடைய ஆடியோ ஃபைலை, இலவசமாக ஃபைலை upload செய்ய அனுமதிக்கும் தளங்களில் (உதாரணத்திற்கு, http://sites.google.com) upload செய்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த ஆடியோவின் முகவரியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த முகவரி .mp3, .wav, அல்லது .midi என்று முடிய வேண்டும்.
*நமக்கு விருப்பமான பாடல்களை அல்லது ஒலி கோப்புகளை நமது தளத்தில் sidebar-ல் ஒலிக்க செய்ய கீழுள்ள Code-ஐ பயன்படுத்தவும்.
<embed width="250" height="50" autostart="false" loop="true"src="https://sites.google.com/site/guide4bloggers/bnfiles/01TitleTrack.mp3"/></embed>
மேலுள்ள code-ல் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்ய,
width - என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு அகலத்தின் அளவை மாற்றலாம்.
height - என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு உயரத்தின் அளவை மாற்றலாம்.
autostart - என்ற இடத்தில், தானாக ஒலிக்க வேண்டுமென்றால் "true" என்றும், manual-ஆக ஒலிக்க செய்ய வேண்டுமென்றால் "false" என்றும் கொடுக்கவும்.
loop - என்ற இடத்தில், பாடல்கள் திரும்ப, திரும்ப ஒலிக்கச் செய்ய "true" என்றும், ஒருமுறை மட்டும் ஒலிக்கச் செய்ய "false" என்றும் கொடுக்கவும்.
src - என்ற இடத்தில் உங்கள் ஆடியோ ஃபைலின் முகவரியை கொடுக்கவும்.
மேலே நான் கொடுத்துள்ள Code-ன் Output பின்வருமாறு இருக்கும்.
பின்னணியில் ஒலிக்கச் செய்ய:
பின்னணியில் பாடல்கள் போன்ற ஆடியோ ஃபைல்களை ஒலிக்கச் செய்ய
<head>
என்ற Code-ஐ தேடி அதற்கு பின்னால், பின்வரும் Code-ஐ paste செய்யவும்.
<embed autostart="true" height="0" loop="true" src="https://sites.google.com/site/guide4bloggers/bnfiles/01TitleTrack.mp3" width="0"/>
* loop - என்ற இடத்தில், பாடல்கள் திரும்ப, திரும்ப ஒலிக்கச் செய்ய "true" என்றும், ஒருமுறை மட்டும் ஒலிக்கச் செய்ய "false" என்றும் கொடுக்கவும்.
* src - என்ற இடத்தில் உங்கள் ஆடியோ ஃபைலின் முகவரியை கொடுக்கவும்.
பின்னணியில் இசை ஒலிப்பதால் வாசகர்களுக்கு சலிப்பு ஏற்படலாம்.