உங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க முக்கியமான 3 இலவச மென்பொருள்கள்


நாம் இணையத்தில் உலாவரும் போது நம்மை அறியாமலே சில மால்வேர்கள் நம் கணினியில் புகுந்து கொண்டு கணினியின் வேகத்தை குறைப்பதோடு நாளடைவில் நம் கணினியை செயலியக்க செய்து விடுகிறது. மற்றும் நம் கணினியின் ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறது. நாம் இணையத்தில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்து சில தேவையில்லாத பைல்களும் நம் கணியில் சேமிக்க படுகிறது.
இதனாலும் நம் கணினி பாதிக்க படுகிறது. நீங்கள் எந்த ஆன்டி வைரஸ் உபயோகித்தாலும் அதை ஏமாற்றி விட்டு இவைகள் நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. ஆகவே இந்த பைல்களை நம் கணினியில் இருந்து எப்படி நீக்குவது என்று இங்கு காண்போம்.


1.Advance System Care Free 3.7.3
இந்த அபாயமான பைல்களை நம் கணினியில் இருந்து முற்றிலும் நீக்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது அதும் இலவசமாக. இந்த மென்பொருளில் நம்முடைய கணினியின் பிரச்சினைக்குரிய பைல்களை கண்டறிந்து முற்றிலுமாக நீக்கு கிறது. இந்த அருமையான மென்பொருள் இலவசமாக கிடைப்பது ஆச்சரியமே. இந்த மென்பொருளில் Spyware, malware, Junk files ஆகியவைகளை முற்றிலுமாக நம் கணினியில் இருந்து நீக்குகிறது. இந்த மென்பொருள் நாம் நீக்கும் பைல்கள் தானாகவே பேக்கப் எடுத்து வைத்து கொள்வதால் நமக்கு தேவைபட்டால் திரும்பவும் அதை நிறுவி கொள்ளலாம்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய
 
  

2. Ccleaner v3.02
இந்த மென்பொருளை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஏற்க்கனவே மூன்றுமுறை இந்த மென்பொருளை பற்றிய பதிவை இந்த தளத்திலேயே போட்டு இருக்கேன். நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் மிகவும் பயனுள்ள மென்பொருள். நம்முடைய கணினியின் தேவையில்லாத பைல்களை நொடியில் கண்டறிந்து அனைத்தையும் நீக்கி விடும். உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபமான மென்பொருள் இது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  நம்மில் பெரும்பாலானோர்  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.  உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இந்த மென்பொருளை கடந்த இரண்டு மாதங்களிலேயே இரண்டு முறை அப்டேட் செய்து உள்ளனர். 
பயன்கள்: 
  • புதிய பதிப்பு 64-bit கணினிகளும் உபயோகிக்கும் வரையில் வடிவமைக்க பட்டுள்ளது.
  • இந்த பதிப்பில் ஒரு புதிய வசதி Tools - Drive Wiper. இந்த வசதி மூலம் நம்முடைய கணினியில் 
  • தேவையற்ற பைல்களை தேடுவதில் அதிக கவனம்.
  • குரோம், IE9 சப்போர்ட் செய்வதில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • அதிவேகமாக இயங்க கூடியது. அதிகபட்சம் 2 நிமிடத்திற்குள் நம் கணினியை சுத்தம் செய்து விடலாம்.
கீழே உள்ள Download லிங்கை  அழுத்தி மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

  • தரவிறக்கம் செய்தவுடன் உங்களுக்கு வந்த .exe பைலை இன்ஸ்டால் செய்யுங்கள். 
  • இன்ஸ்டால் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.
  • இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு scan ஆகி வரும். 
  • இப்பொழுது நீங்கள் அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும். 
  • உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.
  • இதே முறையில் நீங்கள் உங்கள் Registry சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

3. Wise Registry Cleaner Free 5.91
நம்முடைய கணினியில் சில மென்பொருட்களை நாம் நிறுவுவோம். பின்னர் இந்த மென்பொருளின் செயல்பாடு பிடிக்காமல் இதை நீக்கி விடுவோம். இப்படி நீக்கும் போது நம்முடைய கணினியில் உள்ள registryல் அந்த மென்பொருளின் பைல்கள் நீங்காமல் அப்படியே பதிந்து விடும். இதனால் நம் கணினியின் வேகம் மிகவும் பாதிக்க படுகிறது. இந்த பைல்களை நீக்க அருமையான இலவசமென்பொருள் தான் இந்த மென்பொருள். மேலே உள்ள இரண்டு மென்பொருளில் இந்த வசதி இருந்தாலும் யாரும் அந்த மென்பொருட்களை பயன்படுத்தி registry சுத்தம் செய்ய வேண்டாம். இதற்கென்று பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டுள்ள இத மென்பொருளை பயன்படுத்தவும். 
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 
 நாம் கணினியில் சில மென்பொருட்களை இன்ஸ்டால் செய்திருப்போம். நாளடைவில் அது வேண்டாமென்று Uninstall செய்து விடுவோம். ஆனால் அப்படி செய்யும் போது சில தேவையில்லாத பைல்கள் நம் Registry லேயே தங்கிவிடும்.  இதனால் தான் நம் கணினி மிகவும் மந்தமாக  வேலை செய்யும்.
இந்த பைல்களை அழித்தாலே நம் கணினியின் வேகத்தை கண்டிப்பாக  கூட்ட முடியும் என்பதில் ஐயமில்லை. இதுவரை இந்த வேலைக்கு நான் வேறொரு நிறுவனத்தின் மென்பொருள் உபயோகித்து வந்தேன் ஆனால் இந்த மென்பொருள் அதைவிட நன்றாக உள்ளது. ஆதலால் இந்த Sofware அனைவருக்கும் உபயோக படும் என்று பதிவிடுகிறேன்.

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தவும்.
டவுன்லோட் செய்தவுடன் உங்களுக்கு வரும் WDCfree என்ற setupபைலை ரன் செய்து  இன்ஸ்டால் செய்து கொள்ளவும். உங்களுக்கு இரண்டு shortcut keys வந்திருக்கும். அதில் Clear with 1 click  என்பதை டபுள் கிளிக் செய்தாலே உங்கள் கணினியின் registry ஸ்கேன் ஆகி அதில் உள்ள தேவையில்லாத பைல்கள் ஸ்கேன் ஆகி தானாகவே பைல்களை delete செய்து விண்டோவும் க்ளோஸ் ஆகிவிடும். 
   

இந்த வேலைகளை Manual ஆக செய்ய வேண்டுமானால் Wise Registry Cleaner என்ற Shortcut கீயை டபுள் கிளிக் செய்து இயக்கி இடது பக்க மூலையில் மேலே உள்ள Scan என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய கணினி ஸ்கேன் ஆகி 

வந்ததும் நான்காவதாக உள்ள Fix என்ற  பட்டனை அழுத்தி உங்கள் கணினியை கிளீன் செய்து கொள்ளுங்கள்.

 முன்னர் உங்கள் கணினி இயங்கியதற்கும் இப்பொழுது இயங்குவதற்கும் நிறைய மாற்றங்கள் கண்டிப்பாக தெரியும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget