இலவச போட்டோ தொகுப்பு

நம் ஆவணங்கள், செய்திக் குறிப்புகள், தகவல் அறிக்கைகளில் படங்கள் மற்றும் போட்டோக்களை இணைத்து தயாரிக்க விரும்புவோம். சரியான போட்டோக்களுக்கும் படங்களுக்கும் எங்கு செல்வது? என்ற கேள்வியோடு, இணையத்தைச் சுற்றி வந்த போது ஒரு தளம்
கவனத்தைக் கவர்ந்தது.http://www.publicdomainphotos.com/ என்ற முகவரியில் உள்ள அந்த தளத்தில் 5,000 க்கும் மேற்பட்ட போட்டோக்களும், அதிகமான எண்ணிக்கையில் கிளிப் ஆர்ட் படங்களும் கிடைக்கின்றன. புகைப்படங்களைத் தேடிப் பெறுவதற்கு மிக எளிமையான வழி ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் போட்டோக்கள் வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் காட்டப் படுகின்றன. தேவைப்படும் போட்டோவிற்கான பிரிவில் கிளிக் செய்தால், படங்களின் முன் தோற்றக் காட்சிகள் கிடைக்கின்றன. பின் விரித்துப் பார்த்து நம் கம்ப்யூட்டருக்கு மாற்றிக் கொள்ளலாம். மிருகங்கள், கட்டடங்கள், நகரங்கள், பானங்கள், பூக்கள், உணவு, தோட்டம், பூச்சி வகைகள், உள் அலங்கார அமைப்பு, புல்வெளிகள், விளக்குகள், தாவரங்கள் என போட்டோ வகை பட்டியல்கள் நீள்கிறது. இந்த பிரிவுகளுக்குத் துணைப் பிரிவுகளும் கிடைக்கின்றன. இதனால் நம் தேடல் குறுக்கப்பட்டு நம் தேவைகளை எளிதாக நிறைவேற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, landscapes என்னும் பகுதியில் fields, forests, lakes, mountains, roads, and sky என அதன் வகைகள் விரிகின்றன. ஒருமுறை சென்று பார்த்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget