நாம் மென்பொருள்களை நீக்கும் போது ஒரு சில மென்பொருள்கள் முழுமையாக நீக்கப்படாமல் விண்டோஸ் ரிஸிஸ்டரியிலேயே தங்கி விடும். அது போன்ற கோப்புகளை நீக்கினால் மட்டுமே கணணியானது விரைவாக செயல்படும்.
மாறாக கணணிக்கு புதியவர்கள் விண்டோஸ் ரிஸிஸ்டரியை எடிட் செய்ய வேண்டுமெனில் நாம் முதலில் விண்டோஸ் ரிஸிஸ்டரியை பேக்அப் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகே விண்டோஸ் ரிஸிஸ்டரியை எடிட் செய்ய வேண்டும்.
விண்டோஸ் ரிஸிஸ்டரியை பேக்அப் செய்யவும், கிளின் செய்யவும் இணையத்தில் பல மென்பொருட்கள் கிடைக்கிறன. ஆனால் எந்த ஒரு மென்பொருளும் இலவசமாக கிடைக்கவில்லை. இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் எதுவும் சிறப்புடையதாக இல்லை. தற்போது Ashampoo Registry Cleaner ரானது தற்போது லைசன்ஸ் கீயுடன் கிடைக்கிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றி லைசன்ஸ் கீயை பெற்று மென்பொருளை நிறுவிக் கொள்ளவும்.
சுட்டியில் குறிப்பிட்ட வலைதளத்திற்கு சென்று உங்களுடைய ஈமெயில் முகவரியை உள்ளிட்டு Send என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய ஈமெயிலை ஒப்பன் செய்யவும்.
புதியதாக ஒரு மெயிலானது உங்களுடைய கணக்கிற்கு வந்திருக்கும். அதை ஒப்பன் செய்து அதில் குறிப்பிட்டுள்ள லிங்கிற்கு செல்லவும். பின் ஒரு கணக்கை உங்களுக்கென தொடங்கி கொள்ளவும்.
கணக்கு உருவாக்கப்பட்ட பின் உங்களுக்கான லைசன்ஸ் கீயானது கிடைக்கும். லைசன்ஸ் கீயானது உங்களுடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்பபடும்.
இந்த லைசன்ஸ் கீயினை பயன்படுத்தி Ashampoo Registry Cleaner யை முழுமையாக பதிந்து கொள்ளவும். Ashampoo Registry Cleaner மென்பொருளின் சந்தை மதிப்பு $14.95 ஆகும். Ashampoo Registry Cleaner மென்பொருளை பயன்படுத்தி விண்டோஸ் ரிஸிஸ்டரியை பேக்அப் செய்து கொள்ள முடியும்.
லைசென்ஸ் கீயை தரவிறக்க