கேமராவில் அல்லது இணையத்திலிருந்து ஒளிப்படங்களை எடுக்கும் போது சில படங்களின் அளவு அதிகமாக இருக்கும். 1600×1200 போன்ற அளவுள்ள ஒளிப்படங்கள் கோப்பளவிலும் 1 Mb அல்லது 2 Mb என்று அதிகமாக இருக்கும். அதை நாம் யாருக்காவது பகிரும் போது அல்லது இணையத்தில் பதிவேற்றும் போது அல்லது பிளாக்கரில் பயன்படுத்தும் போது அது அப்லோடு ஆக அதிக நேரங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
இதற்கு ஒளிப்படத்தின் அளவைக்
குறைப்பது இணையத்திலோ அல்லது மின்னஞ்சல் அனுப்பும் போது உபயோகமாக இருக்கும். கணிணியிலும் ஹார்ட் டிஸ்கின் இடம் மிச்சமாகும்.இதற்கு ஒளிப்படத்தின் அளவைக்
நாம் ஒளிப்படத்தின் Resolution ஐக் குறைக்கும் போது கோப்பின் அளவும் Kb கணக்கில் குறைந்துவிடும். ஆனால் சில மென்பொருள்களின் மூலம் ஒளிப்படங்களின் அளவைக் குறைக்கும் போது அதன் தரமும் சேர்ந்து குறைந்துவிடுவதை கண்கூடாக பார்க்கலாம். முக்கியமான விசயம் ஒளிப்படங்களுக்கு அதன் தெளிவே தவிர அளவல்ல. Image Converter என்ற மென்பொருள் அதன் அளவில் சிறியது. ஆனால் எளிமையான முறையில் ஒளிப்படங்களின் தரம் குறையாமல் அதன் அளவை அருமையாக குறைத்து விடுகிறது.
இந்த மென்பொருளை நிறுவ வேண்டியதில்லை. தரவிறக்கி விரித்து (Extracting) அதன் அப்ளிகேசன் கோப்பைக் கிளிக் செய்தாலே போதும். அதில் எந்த போல்டரில் உள்ள ஒளிப்படங்களை மாற்றப்போகிறிர்களோ அதை தேர்வு செய்து விட்டு எந்த போல்டரில் சேமிக்க வேண்டும் எனக் குறிப்பிட வேண்டும்.
இதில் குறிப்பிட வேண்டிய விசயம் Relative size அல்லது Absolute size என்பதை தீர்மானிக்கலாம். அதாவது 100 இல் எத்தனை சதவீதத்திற்கு மாற்றுவது என்பது Relative. அதுவே நாம் 800×600 சரியாக குறிப்பிடுவது Absolute ஆகும்.
அடுத்து எந்த வகையில் சேமிக்க வேண்டும் (Jpeg, gif, Png, Tiff) என்பதை தேர்வு செய்த பின்னர் JPEG Quality 75 சதவீதம் வைத்துவிட்டு Process என்ற பட்டனைக் கிளிக் செய்தால் போதும். உங்கள் ஒளிப்படங்கள் தரம் குறையாமல் அதன் அளவு மட்டும் குறைந்து காணப்படும்.
தரவிறக்க