கோப்பறைகளின் நிறத்தை மாற்றம் செய்ய மென்பொருள்

அதிகமாக உள்ள கோப்புகள் அனைத்தையும் ஒரே கோப்பறையில் வைத்திருப்போம். சாதாரணமாக கோப்பறைகள் அனைத்துமே ஒரே மாதிரியாக இருக்கும்.

இவற்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டுமெனில் தனியொரு பெயரை வைத்து மட்டுமே பார்க்க முடியும். அதிகமான கோப்பறைகள் உள்ள இடத்தில் எளிதாக நாம் தேடும் கோப்பறையை காண முடியாது. இதனை வேறுபடுத்தி பார்க்க மேலும் ஒருவழி உள்ளது.
கோப்பறையில் நிறத்தை மாற்றம் செய்வது இல்லையெனில், அதன் உருவ படத்தை மாற்றம் செய்தல். இவற்றை விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தின் உதவியுடன் செய்ய முடியும். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும்.
விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்ட்டத்தில் நீங்கள் உருவாக்கும் கோப்பறைகளுக்கு தனி கலர் மற்றும் அழகிய ஐகானை உருவாக்க முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும்.
பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த கோப்பறையை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்யது கொண்டு Select icon என்னும் பொத்தானை அழுத்தி உங்கள் விருப்பபடி ஐகானை மாற்றம் செய்து கொள்ள முடியும்.
இல்லையெனில் கோப்பறையின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Folderico என்னும் தேர்வினை தேர்வு செய்து தோன்றும் வரிசையில் உங்கள் விருப்பபடி கோப்பறையை மாற்றம் செய்து கொள்ள முடியும்.
இப்படியும் கோப்பறையில் நிறத்தையும், உருவ படத்தையும் மாற்றிக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டுமே வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.

web counter

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget