எம்.எஸ் ஆபீஸ் 2010 சர்வீஸ் பேக் 1

சென்ற ஜூன் மாதம், தன் ஆபீஸ் 2010 அறிமுகமாகி ஓராண்டினை, மைக்ரோசாப்ட் கொண்டாடி யது. இந்த கூட்டுத்தொகுப்பிற்கான சர்வீஸ் பேக் ஒன்றினை அதே நேரத்தில் வெளியிட்டுள்ளது. 
இந்த சர்வீஸ் பேக் புரோகிராம் மூலமாக சில முக்கிய மாற்றங்களை மைக்ரோசாப்ட் தந்துள்ளது. இதுவரை வெளியான

அப்டேட் அனைத்தும் மொத்தமாக இதன் மூலம் வழங்கப் பட்டுள்ளது. நிலையாக நின்று இயங்கும் திறன், பாதுகாப்பு, இயக்க திறன் ஆகியவை கூட்டப்பட்டுள்ளன. அனைத்து ஆபீஸ் புரோகிராம்களும், கிளவ்ட் கம்ப்யூட்டிங் புரோகிராமான ஆபீஸ் 365 உடன் இணைந்து செயல்படத் தேவையான மாற்றங்கள் இந்த அப்டேட் மூலம் கிடைக்கின்றன. அத்துடன் விண்டோஸ் லைவ் ட்ரைவ் மற்றும் ஒன் நோட் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயலாற்றத் தேவையான மாற்றங்கள் இதில் தரப்பட்டுள்ளன. 
ஆபீஸ் தொகுப்பின் ஒவ்வொரு புரோகிராமிலும் ஏற்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகள் குறித்து இங்கே சுருக்கமாகக் காணலாம்.
1. எக்ஸெல் 2010: முந்தைய பதிப்பு களில் உருவாக்கப்பட்டுள்ள ஒர்க் புக்குகளைக் கையாளும்போது பார்மட் மற்றும் பிற கட்டமைப்புகளை, அவற்றிற் குப் பாதகமின்றிக் கையாளுவதற்குத் தேவையான கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக, ஸ்பானிஷ், டச், டர்க்கிஷ் போன்ற சில ஐரோப்பிய மொழிகளை, இதில் கையாளும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. பவர்பாய்ண்ட் 2010: இத்தொகுப் பில் உள்ள Use Presenter View அதன் மாறா நிலையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. முதல் மானிட்டரில் பிரசன்டேஷன் தொகுப்பில் உள்ள நோட்ஸ்களும், துணை மானிட்டரில் பிரசன்டேஷன் ஸ்லைடுகளும் காட்டப்படும் வசதி தரப்பட்டுள்ளது.
3. வேர்ட் 2010: இத்தொகுப்பில் Display Map பதிந்து காட்டப்படுகையில், அது சரியாக இப்போது காட்டப்படுகிறது. பாராகிராப் கட்டமைப்பினைச் சரி செய்கையில், ஒரு பாராவின் இன்டென்ட் திருத்தங்களின் போது, இன்னொரு பாராவின் இன்டென்ட் முன்பு மாற்றப் பட்டது. இந்த குறை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது. 
4. அவுட்லுக் 2010: இந்த தொகுப்பும் ஆபீஸ் 365 தொகுப்புடன் இணைக்கப் படுகிறது. இதனையே மெயில்கள் அனுப்ப, மாறா நிலைத் தொகுப்பாக செட் செய்யப்படும் வசதி தரப்பட்டுள்ளது. 
5. ஒன் நோட் 2010: விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவில் உள்ள ஒன் நோட் நோட்புக்குகளுடன், ஒன் நோட்புக் 2010 சரியாக ஒருங்கிணைந்து, இணக்கமாகச் செயல்படக் கூடிய வகையில் எஸ்.பி.1 தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. தேடல் முடிவுகளில் உள்ளாக, தேடப்படும் தகவல் ஹைலைட் செய்யப்படுவது இதன் சிறப்பாகும்.
6. அக்செஸ் 2010: அப்ளிகேஷன் பார்ட் காலரியில், சமுதாய தளங்களுக்கான தகவல்களை ஒருங்கிணைக்கக் கூடிய வசதியினை சர்வீஸ் பேக் 1 தருகிறது.எக்ஸெல் ஒர்க் புக்கிற்கு ஒரு அக்செஸ் பைலை எக்ஸ்போர்ட் செய்கை யில் ஏற்பட்ட பிரச்னை தீர்க்கப் பட்டுள்ளது.
மேலும் பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. நீங்கள் ஆபீஸ் 2010 ஒரிஜினல் தொகுப்பினைப் பயன்படுத்து பவராக இருந்தால் மட்டுமே இந்த சர்வீஸ் பேக்கினை டவுண்லோட் செய்து, இணைக்க முடியும். உங்கள் ஆபீஸ் 2010 தொகுப்பு கூடுதல் வசதி மற்றும் பாதுகாப்புடன் உங்களுக்கு இந்த சர்வீஸ் பேக் 1 மூலம் உதவும். 




32 பிட்டிற்கான சர்வீஸ்தொகுப்பினை  பெற
64 பிட்டிற்கான சர்வீஸ்தொகுப்பினை  பெற



web counter

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget