கோப்புகளில் துணைப் பெயர் காட்டப்பட எளிய வழி

பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டியலைக் காண்கையில், பைலின் முதல் பெயர் மட்டுமே காட்டப்படும். ஒரே பெயரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின், நமக்கு எது எந்த பைல் என்று தெரியாது. எடுத்துக் காட்டாக, ஒரே பெயரில், வேர்ட், ஸிப், ஜேபெக்
பைல் அமைக்கலாம். இவை வரிசையாக இருந்தால், எது என்ன பைல் என்று உடனே நமக்குத் தெரியாது. எனவே பைலின் துணைப் பெயரும் காட்டப் பட்டால், நம் வேலை எளிதாகிவிடும். இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்ப்போம்.
பைல் பெயர் ஒன்றில், அதன் புள்ளியை அடுத்து வலது பக்கம் உள்ள பெயர், அந்த பைல் என்ன வகையை, பார்மட்டைச் சேர்ந்தது என்று காட்டும். பொதுவாக, இந்த பெயர் காட்டப்பட மாட்டாது. இதனையும் சேர்த்து ஒரு பைல் பெயர் காட்டப்பட வேண்டும் எனில்,
My Computer>Tools>Folder Options எனச் சென்று கிடைக்கும் விண்டோவில் View தேர்ந்தெடுக்கவும். இதில் Hide extensions for known file types என்று இருக்கும் வரியின் முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இனி பைல் பெயர்கள் முழுமையாக அதன் எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget