சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கக் கூடிய முகப் பூச்சு பாக்டீரியாவில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. சூரிய வெப்பம் நேரடியாக தாக்கும் போது தோல் புற்றுநோய் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்ப்பதற்காக முகப் பூச்சு தடவிக் கொள்வது நல்லது என கூறப்படுகிறது. அலர்ஜி ஏற்படுத்தாத முகப் பூச்சு தயாரிப்பது தொடர்பாக ஸ்வீடனின் கோதன்பெர்க் மற்றும் சால்மர்ஸ்
தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். வெப்ப பகுதிகளில் மட்டுமே வாழும் சியானோ பக்டீரியா என்ற பக்டீரியாவில் உள்ள ஸ்கைடோனியம் என்ற மூலப்பொருள் புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாப்பளிப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த பாக்டீரியாவில் இருந்து சரும பாதுகாப்பு முகப் பூச்சு உருவாக்கியுள்ளனர். இது அதிக வெப்பத்தை தாங்கி சருமத்தை பாதுகாப்பது முதல்கட்ட சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.