பூமிக்கு அருகில் வரும் செவ்வாய் கிரகம்! வெறும் கண்ணால் பார்க்கலாம்!!

பூமிக்கு அருகில் வரும் செவ்வாய் கிரகத்தை, பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம்' என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயலர் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறினார்.அவர் கூறியதாவது:சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் செவ்வாய் கிரகம், வரும் 3ம் தேதி நள்ளிரவு, 1.40 மணிக்கு, பூமிக்கு, 10.08 கோடி கி.மீ., தொலைவில் வருகிறது. இத்தொலைவு, 5.5 கோடி கி.மீ.,க்கும், 38 கோடி கி.மீ.,க்கும் இடையே வேறுபடும். 26 மாதங்களுக்கு ஒரு முறை வரும் இந்த நிகழ்வின் போது,
இரவு நேரத்தில், வானத்தின் கிழக்கு திசையில், சிவப்பு நிறத்தில், செவ்வாய் கிரகம் தெரியும். இதை பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம்.நாளை முதல், 4ம் தேதி வரை, இரவு 7 மணி முதல், 9 மணி வரை, இந்த நிகழ்வை பொதுமக்கள் தொலை நோக்கியில் காண, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கம், சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கு முன், 2003 ஆக., 27ம் தேதி, செவ்வாய் கிரகம், பூமிக்கு, 5.5 கோடி கி.மீ., தொலைவிலும், 2010 ஜன., 29ம் தேதி, 9.95 கோடி கி.மீ., தொலைவிலும் வந்தது.இவ்வாறு அய்யம்பெருமாள் கூறினார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget