பாலாவின் ஐந்து படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர் ரவி. ஆச்சார்யா என்ற ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு தன் பெயரையே 'ஆச்சார்யா ரவி' என மாற்றிக் கொண்ட அவர், இப்போது ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் கதை நிகழும் காலம் 1978-ம் ஆண்டு. அன்றைக்கு பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி என்பது 11-ம் வகுப்பு. ப்ளஸ்டூ கிடையாது. பியூசிதான்!
இந்த பியூசி காலகட்டத்தில் படித்த மாணவர்களின் கதையைத்தான் இப்போது படமாக்கப்போகிறார். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி போன்ற ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள், உறவினர்களைச் சுற்றிச் சுழலும் கதை இது.
கதை ரெடி... வசனம் ரெடி... தயாரிப்பாளர் கூட ரெடிதான்.. சரி ஷூட்டிங் கிளம்பலாம் என்றால், இன்னும் இரு ஹீரோக்கள் செட் ஆகவில்லையாம்.
ஏன்?
"அந்தக் காலத்தில் பார்த்த மாதிரி முகம், முடியமைப்பு கொண்ட இளைஞர்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். நிறையப் பேரப் பாத்துட்டேன். ஆனா யாரும் சரியா வரல... உங்கள்ல யாராவது இருந்தாலும் சொல்லுங்க. விவரங்களை போட்டோவோட aacharya.ravi@yahoo.com ஒரு மெயில் தட்டிவிடுங்க..." என்றார் ரவி.
இஷ்டம்னா... ஒரு மெயில் தட்ட கஷ்டமா என்ன!