தானே புயலுக்கு உதவ உருவாகும் இரு கில்லாடிகள்!


தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஒரு படம் எடுக்கிறார்கள். படத்துக்கு இரு கில்லாடிகள் என பெயர் சூட்டியுள்ளனர்.


டென்மார்க்ஷான், தனது ஷான் இன்டர்நேஷனல் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.



காதல், காமெடி, சென்டிமெண்ட் கலந்து உருவாகி வரும் இரு கில்லாடிகள் பட வெளியீட்டின் மூலம் கிடைக்கும் பணத்தை தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியாக வழங்கப்போவதாக தயாரிப்பாளர் டென்மார்க்ஷான் அறிவித்துள்ளார். படத்தின் இயக்குநரும் அவர்தான்.


கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்ற பயாஸ் என்கிற கிருஷ், சுவாதி ஆகியோர் இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயினாக அறிமுகமாகிறார்கள்.


கனகப்ரியா, அசோக், அலெக்ஸ், செல்வி, கணேஷ், கிரேஸி, விஜய்பாலாஜி ஆகிய புதுமுகங்களும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் வெண்ணிற ஆடைமூர்த்தி கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.


படத்தின் இறுதிக்காட்சியாக கவிஞர் அறிவுமதி எழுதிய, “காதல் சாரல் தூறலில் நனைந்தேன்… உயிரிலே ஊனிலே உறவிலே நான்…” எனத் தொடங்கித் தொடரும் பாடல் காட்சியை மாமல்லபுரம்-கடற்கரை பகுதியில் படமாக்கப்பட்டது.


படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. ஏப்ரலில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்