புதுமைகளை புகுத்தி வரும் ஃபேஸ்புக் மீண்டும் இன்னொரு புதிய வசதியுடன் பேஸ்புக் நண்பர்களை சந்திக்க இருக்கிறது. ஃபேஸ்புக் மெஸென்ஜர் அப்ளிகேஷனை உருவாக்கி உள்ளது ஃபேஸ்புக். இந்த ஃபேஸ்புக் மெஸென்ஜர் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
இனி நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டும் என்றால் ஃபேஸ்புக் பக்கத்தை விரிக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த புதிய ஃபேஸ்புக் மெசன்ஜர் மூலம் எளிதாக சாட் செய்யலாம். ஏதாவது புதிய செய்திகள் நண்பர்களிடம் இருந்து வந்தால் அதை டெஸ்க்டாபிலேயே சுலபமாக பார்த்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
இதற்கு முன்பாகவே ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஃபேஸ்புக் மெஸென்ஜரை உருவாக்கி இருந்தது. இதனால் ஸ்மார்ட்போன்களில் எளிதாக ஃபேஸ்புக் மெசன்ஜரை உபயோகிக்க முடிந்தது. இப்போது விண்டோஸ் இயங்குதளத்தில் உருவாகி இருக்கும் இந்த ஃபேஸ்புக் மெசன்ஸர் மூலம், இந்த புதிய மெசன்ஜர் அப்ளிக்கேஷனை கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.
இந்த ஃபேஸ்புக் மெஸென்ஜர் அப்ளிகேஷன் இன்னும் சில வாரங்களில் ஃபேஸ்புக் பக்கங்களில் வழங்கப்பட உள்ளது ஃபேஸ்புக். அதுவரை காத்திருக்க வேண்டுமே என்று நினைப்பவர்கள் இதை டவுன்லோடும் செய்யலாம் என்று தகவல்கள் கூறுகின்றது.