ஷங்கரின் அடுத்த படத்திற்கு கதை களம் ரெடி!


கறுப்புப் பணம், ஊழல், சமூக ஒழுக்கமின்மையை தொடர்ந்து தன் படங்களில் சாடி வரும் இயக்குநர் ஷங்கர் அடுத்து குறி வைத்திருப்பது... பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மோசமான வாக்காளர்களையும், அவர்களுக்கு பணத்தை அள்ளிவிடும் வேட்பாளர்களையும்!


விக்ரம் - பிசி ஸ்ரீராம் - ஏ ஆர் ரஹ்மான் என மீண்டும் ஒரு மெகா கூட்டணியோடு ஆரம்பிக்கும் தன் அடுத்த படத்தின்
கதைக் களம் 'ஓட்டுக்குப் பணம்' என்பதுதான்.


இந்தப் பின்னணியில் ஆக்ஷன் - காதல் - காமெடி என்ற கட்டமைப்பில் திரைக்கதையை உருவாக்கி வருகின்றனர் எழுத்தாளர்கள் சுபா.


படத்தின் தலைப்பு 'தேர்தல்!'


பாலிவுட்டிலிருந்து ப்ரியங்கா சோப்ரா மாதிரி ஒருவரை இந்தப் படத்தில் ஹீரோயினாக்க வேண்டும் என முயற்சித்து வருகிறாராம் ஷங்கர். அசினுடனும் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள்.


தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்கிறார்கள். ஆனால் இன்னமும் இறுதியாகவில்லையாம்.


யாராக இருந்தாலும் கேள்வி கேட்காமல் எக்கச்சக்க பணம் செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்