HandBrake - வீடியோ கன்வெர்டர் மென்பொருள்


DVD வீடியோக்களை MP4 அல்லது MKV வீடியோ வகைகளுக்கு கன்வெர்ட் செய்ய ஒரு சில மென்பொருட்கள் சந்தையில் இருந்தாலும் HandBrake எனும நிரல் கட்டற்ற சுதந்திர இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் இயங்குதளங்களில் இயங்குவதற்க்கு தனித்தனியாக தரவிறக்க கிடைக்கிறது. இதன் File மெனுவில் உள்ள Source பொத்தானை அழுத்தி, மாற்ற வேண்டிய DVD வீடியோ  கோப்பு அல்லது Video_TS Folder ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.
Tools menu வில் Options க்ளிக் செய்து General டேபில் output folder - location ஐ கொடுக்கலாம்.  பிறகு  மூலத்திரையில் Output settings இற்கு கீழாக உள்ள container drop down list -இல் MP4 அல்லது MKV கோப்பு வகையை தேர்வு செய்து கொள்ளலாம்.  


மேலும் இதில் Video filters, Sub Titles, Chapters, Audio, video codec மாற்றுவதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது. தேவையான அனைத்து settings களையும் செய்த பிறகு மேலே உள்ள Start பொத்தானை அழுத்தி காத்திருக்க வேண்டியதுதான். மொத்தத்தில் வீடியோ பிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு இலவச மென்பொருளாகும்.


இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:6.58MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget