மலையாள பட உலகின் முன்னணி நடிகராக இருக்கும் ப்ருத்விராஜ், விரைவில் ஒரு வித்தியாசமான வேடத்தில் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே வேடத்தில் நடிக்க இருக்கிறார். தமிழில் சத்தம் போடாதே, மொழி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ப்ருத்விராஜ். மலையாள படஉலகிலும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதுதவிர இந்தியிலும் நடித்து வருகிறார். பிரபல டைரக்டர் ஷாஜி கைலாஷ் மலையாளம் மற்றும் தமிழில் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை
மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில் கோட்சே வேடத்தில் ப்ருத்விராஜ் நடிக்க இருக்கிறார்.
கோட்சேயின் வாழ்க்கை சம்பவங்கள் படமாக இருக்கிறது. அவனது குடும்ப சூழல், காந்தியை கொல்ல வகுத்த திட்டங்கள், அதன் அரசியல் பின்னணி, காந்தியை கொல்வதற்கு முந்தைய நாள் கோட்சேயின் மனநிலையும், உணர்வு போராட்டங்களும் எப்படி இருந்தன போன்றவை இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக படத்தின் டைரக்டர் ஷாஜி கைலாஷ் கூறியுள்ளார்.