எக்ஸ்பெக்டிங் பேபி - பேஸ்புக்கில் புதிய வசதி!


சமூக வலைத்தளமான பேஸ்புக் எக்ஸ்பெக்டிங் பேபி என்ற புதிய ஆப்ஷனை டைம்லைனில் உருவாக்கி உள்ளது. கூடிய விரைவில் குழந்தை பெற பேகிறவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த ஆப்ஷனை பயன்படுத்தலாம். தாய், தந்தையர் ஆக போகிற விஷயத்தினை பேஸ்புக்கில் எழுதி தான் தெரிவிக்க வேண்டி இருந்தது. ஆனால் சொல்லாமல் தெரிவிக்க ஒரு புதிய வழியை ஏற்படுத்தி உள்ளது பேஸ்புக்.
எக்ஸ்பெக்டிங் ஏ பேபி என்ற
இந்த ஆப்ஷனை பயன்படுத்தி கூடிய விரைவில் குழந்தை பெற போகிற விஷயத்தினை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

டைம்லைன் பக்கத்தில் உள்ள, லைப் இவன்ட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, அதில் உள்ள பேமிலி அண்டு ரிலேஷன்ஷிப் என்ற ஆப்ஷனையும் க்ளிக் செய்ய வேண்டும். இதில் எக்ஸ்பெக்டிங் பேபி அல்லது நியூ சைல்டு
போன்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் பிறகென்ன, இந்த செய்தியை சேர் செய்து பகிர்ந்து கொள்ளலாம். அல்லது சமீபமாக குழந்தை பெற்றுவிட்ட சந்தோஷ செய்தியையும் சமூக வலைத்தள உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

ஓரினச் சோர்க்கையாளர்களுக்கான பிரத்தியக குறியீட்டை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது சமூக வலைத்தளமான பேஸ்புக். இப்படி ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான பிரத்தியேக குறியீட்டை பேஸ்புக் வழங்கியுள்ள செய்தி ஜூலை 3ம் தேதி தான் நமது கிஸ்பாட்டிலும் வெளியானது.
பலரும் சொல்ல யோசிக்கும் விஷயத்தினையும், சந்தோஷத்தினையும் எந்த வித தடையும் இன்றி பகிர்ந்து கொள்ள பேஸ்புக் எப்போதுமே முன்னுதாரணமாக இருந்து வருகிறது. எக்ஸ்பெக்டிங் பேபி என்ற இந்த ஆப்ஷனும் கூட ஓர் ஆழ்ந்த யோசனையின் மூலம் உருவான ஒரு விஷயம் தான்.
இந்த எக்ஸ்பெக்டிங் பேபி ஆப்ஷன் இன்னும் நிறைய பேரது டைம்லைன் பக்கத்தில் வரவில்லை. ஆனால் குழந்தை பெறயிருக்கும் நிறைய பேஸ்புக் உறுப்பினர்கள் இந்த வசதியினை பயன்படுத்தி, சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கின்றனர்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget