நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘துப்பாக்கி’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். தாண்டவம் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ஏ.எல்.விஜய்யும் அடுத்ததாக தலைவன் படத்திற்காக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கிறார். ஒருபுறம் இந்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு வேகமாக நடந்துவருகிறது. தலைவன் படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் ஏ.எல்.விஜய், பாடகர் விஜய் யேசுதாஸை தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிகிறது.
விஜய் யேசுதாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். இதுவரை திரைக்கு பின்னால் பாடல்களைப் பாடி வந்த விஜய் யேசுதாஸ் தனது முதல் படத்திலேயே வில்லனாக நடிக்கிறார். நடிகை லட்சுமிராய் இந்த படத்தில் நடிக்க தாண்டவம் படத்தில் நடிக்கும் போதே ஏ.எல்.விஜய்யின் காதில் போட்டு வைத்துவிட்டார்.