சினிமாவின் எதிர்காலத்தை கணித்த சூப்பர் ஸ்டார்!


இனி சினிமாவின் எதிர்காலம் 3 டி படங்கள்தான் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சிவாஜி படத்தின் 3 டி பதிப்பின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு திடீரென்று வந்த ரஜினி, ட்ரைலரை ரசித்துப் பார்த்தார். பின்னர் நிருபர்களிடம் பேசினார். நீண்ட காலத்துக்குப் பிறகு நடக்கும் ரஜினி பிரஸ் மீட் இது. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் - பதில்களும்...
சிவாஜி படம் 3டியில் உருவாகியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: ஆண்டவன் எப்போதும் என் கூடவே இருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். என் ரசிகர்களுக்கு என்ன திருப்பிக் கொடுக்கப் போகிறேன் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ஏவி.எம். நிறுவனம் `சிவாஜி' படத்தை 3டி படமாக உருவாக்கியிருக்கிறது. இந்த படத்தை சில நாட்களுக்கு முன்புதான் எனக்கு திரையிட்டு காண்பித்தார்கள். என் படம் என்பதை மறந்து, நானே கைதட்டி ரசித்தேன்.
`கோச்சடையான்' படம்தான் முதலில் 3டியில் வருவதாக இருந்தது. ஏவி.எம். நிறுவனம் முந்திக்கொண்டார்கள். உங்களுக்கே (நிருபர்களுக்கே) இந்த படம் பிடித்து இருக்கிறது. என் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

அடுத்ததாக உங்களுடைய எந்த படத்தை 3டி படமாக உருவாக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? விரும்புகிறீர்கள்?
பதில்: எந்திரன், படையப்பா போன்ற பிரமாண்டமான படங்களை 3டியில் கொண்டு வரலாம். இனிமேல் செய்கிற படங்கள் தொழில்நுட்பத்தில் சிறப்பானதாக இருக்க வேண்டும். அதற்கேற்ப கதைகளை உருவாக்க வேண்டும். தமிழ் படங்கள் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை நெருங்கி விட்டன.
3 டிக்கு மாத்தின காட்சிகள்ல உங்களுக்குப் பிடிச்ச காட்சிகள் என்னென்ன?
ரஜினி : எனக்கு இன்னும் முழுப் படத்தையும் அவங்க போட்டு காட்டலே. மூணு ரீல்தான் காமிச்சாங்க. வாஜி வாஜி சாங் பார்த்து நானே பிரமிச்சு போயிட்டேன். மூணு வாட்டி அதை திரும்ப திரும்ப போடச் சொல்லிப் பார்த்தேன். இதுவே இப்படி இருக்குன்னா அந்த கண்ணாடி மாளிகை சாங், அதிரடிக்காரன் பாட்டு, அப்புறம் அந்த க்ளைமாக்ஸ் பைட் இதெல்லாம் எப்படி இருக்கும்.... நீங்க ஏற்கனவே படம் பார்த்திருபீங்க. அதெல்லாம் 3 டியில எப்படியிருக்கும்னு நீங்களே விஷுவலைஸ் பண்ணிப் பார்க்கலாம்!

கறுப்பு-வெள்ளை பட காலத்திலும் இருந்தீர்கள். கலர் பட காலத்திலும் இருந்தீர்கள். இப்போது 3டி பட காலத்திலும் இருக்கிறீர்கள். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: நான் அதிர்ஷ்டசாலி. எதையும் நான் சாஸ்தி `பிளான்' பண்ணி செய்வதில்லை. எல்லாமே ஆண்டவன் அருளால் நடக்கிறது. கடவுளுக்கு நன்றி.''
பேட்டியின்போது பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், பிரசாத் லேப் நிர்வாக இயக்குனர் சாய் பிரசாத், ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget