ஹாலிவுட்டை கலக்க போகும் கங்கனா!


"தாம் தூம் படத்துக்கு பின், கோலிவுட்டிலிருந்து மாயமான கங்கனா ரனாவத், பாலிவுட்டில் நல்ல நிலையில் தான் இருக்கிறார். நடிப்பை தாண்டி, சினிமாவின் மற்ற துறைகளிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக, இப்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். கங்கனா இயக்கும் ஆங்கில குறும்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப் படவில்லை. அமெரிக்காவில் பட பிடிப்பு முடிந்துள்ள நிலையில்,  இது குறித்த, தன் அனுபவங்களை கங்கனா பகிர்ந்து கொண்டார்.
"கடந்தாண்டு ஹாலிவுட்டுக்கு சென்றபோது, அங்குள்ள சில முக்கிய பிரபலங்களை சந்தித்தேன். அப்போது தான், படம் இயக்கும் ஆர்வம் எனக்கு வந்தது. நான் இயக்கும் படத்தின் கதை, ஒரு சிறுவனுக்கும், நாய்க்கும் இடையேயான நட்பை மையமாக கொண்டது, என்றார்.
மேலும், "இதற்காக, குழந்தைகளுடன் எப்படி பழகுவது என்பது குறித்து, ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றேன். சிறுவனை நடிக்க வைப்பது பெரிய வேலையாகப் போய் விட்டது. ஆங்காங்கே, கேமராவை மறைத்து வைத்தும், அவனுக்கு விளையாட்டு காட்டியும், படம் பிடித்தோம். இந்த படத்தில் நடித்த நாய், படு திறமையானது. நன்கு பயிற்சி பெற்ற நாய் என்பதால், அதை நடிக்க வைப்பது அவ்வளவு சிரமமாக இல்லை. நான், படம் இயக்குவது பற்றிய தகவல், பாலிவுட்டில் பரவியதும், "இனிமேல் நடிப்பீர்களா, இயக்குவீர்களா என, கேட்கின்றனர். என்னை பொறுத்தவரை, நடிப்பும், இயக்கமும், இரு கண்களை போன்றது. இரண்டிலும் தொடர்ந்து ஈடுபடுவேன். இந்த குறும்படத்துக்காக, ஹாலிவுட் திரைப்படக் குழுவினருடன் பழகியதும், அவர்களுடன் பணியாற்றியதும், மறக்க முடியாத அனுபவம், என்கிறார் கங்கனா.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget