
விதார்த் நடிப்பில், பாரதிராஜாவின் உதவியாளர் மங்கலேஸ்வரன் இயக்கும் படம், "காட்டுமல்லி இதில், பழங்குடி இன பெண்ணாக நடிக்கிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யா. இதற்காக, 10 நாட்கள் பழங்குடி மக்களோடு பழகி, அவர்களின் நடை உடை பாவனைகளை உன்னிப்பாக கவனித்து, கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி உள்ளார். அதனால், இந்த படத்தில் இடம்பெறும் காதல் காட்சிகள் கூட, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதுமையாக இருக்கும் எனக்கூறும் இயக்குனர், "இந்தப் படத்தில் மரங்களே
மனித வாழ்வின் ஆதாரம் என்பதை சொல்லும், "காற்றின் வீடே காடே காடே, ஆதிமனிதன் கூடே கூடே என்றொரு பாடல் உள்ளது. இந்த பாடலை தமிழக வனத்துறை விழிப்புணர்ச்சி பாடலாக பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்.