
மூன்று படங்கள் பெயர் பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தின் படியேறின. இதில் துப்பாக்கி விவகாரம் அனைவருக்கும் தெரியும். பல வாரங்களாக இந்த வழக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது. தாண்டவம் பெட்டர். ஒரே தாவாக பிரச்சனையை தாண்டியுள்ளது. தாண்டவம் என்ற பெயரை ஸ்டார் நைன் மீடியா என்ற நிறுவனமும் பதிவு செய்திருந்தது. அவர்கள் விக்ரமின் தாண்டவத்துக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தை அணுகினர். விசாரணை நேற்றைக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தாண்டவம் தலைப்பை பயன்படுத்த
முழு அனுமதி கொடுத்து தீர்ப்பு வழங்கினார். இதனால் படத்தின் விளம்பரங்கள் தாண்டவம் என்ற பெயரில் தொடர்ந்து வெளிவருகின்றன.விஷாலின் சமர் படமும் தலைப்பு பிரச்சனையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.