
சினிமாவில் அழகான அம்மாக்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்தை போக்கவந்தவர்கள் சரண்யா பொன்வண்ணனும், லஷ்மி ராமகிருஷ்ணனும்தான். குரலும், உருவமும் பாந்தமாய் பொருந்த சினிமாவில் அம்மாக்கள் வரிசையில் செட் ஆகிவிட்டார் லஷ்மி. சிறுவயதில் மிஸ். கோயம்புத்தூர் பட்டம் பெற்றிருந்தாலும் சினிமாவில் நடிப்பதை விட இயக்குநர் ஆகவேண்டும் என்பதை லட்சியமாகக்கொண்டு சினிமாத்துறைக்கு வந்தவர் இவர். குறைந்த பட்ஜெட்டில் ஆரோகணம் என்ற திரைப்படத்தையும் இயக்கிவிட்டார்.
சினிமாவில் நடித்தாலும்
விளம்பரப்படங்கள், சீரியல் என அனைத்தையும் ஒரு கை பார்த்துவிட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘அவள்' சீரியலில் மகளுக்கும், அம்மாவிற்கும் இடையே நடைபெறம் போட்டிதான் கதை. அதில் வில்லத்தனம் செய்யும் அம்மாவாக நடித்துள்ளார் லஷ்மி. அவருடைய கேரக்டருக்கு நெகடிவ் ரோல் புதிது என்பதால் சிரமமாக உள்ளதாக கூறியுள்ளார் லஷ்மி.