தமிழ் சினிமாவில் சில முன்னணி கதாநாயகிகள் மார்க்கெட் இருக்கும் வரை நடித்துவிட்டு பிறகு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிடுவது அனவரும் அறிந்ததே. ஆனால் நடிகை ஷாலினி பிரபலமாக இருந்தபோதே நடிகர் அஜீத்குமாரை மணந்துகொண்டு வீட்டோடு செட்டிலாகிவிட்டார். அதன் பிறகு வெளியில் அவர் தலை தெரிவதே அதிசயம்.
அஜீத்தை போன்றே வெளி உலகை அதிகம் விரும்பாத ஷாலினி எங்காவது நெருங்கிய நண்பர்களின் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அஜீத்துடன் வருவார். படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், ஷாலினி பேட்மிட்டன் விளையாட்டில் ஆர்வம் காட்டி தொடர்ந்து விளையாடிக்கொண்டு வருவதே அதிகம் பேருக்கு தெரியாது.
சமீபத்தில் நாகர்கோவிலில் நடந்த மாநில அளவிலான பேட்மிட்டன் தரவரிசை போட்டியில் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆட்டங்களில் ஷாலினி ஜோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது பற்றி பேட்டியளித்த ஹாலினி “ நான் பயிற்சி எடுத்துக் கொள்ள என் கணவர் எனக்கு வீட்டிலேயே பேட்மிட்டன் கோர்ட் கட்டித் தந்துள்ளார்.
மேலும் படங்கள் |