தனுஷை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தமன்னா!


தனுஷ் அற்புதமான, சிறந்த மனிதர் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.  தமன்னாவும், தனுசும் வேங்கை படத்தில் ஜோடியாக நடித்தனர். அதன்பிறகு தமன்னா தெலுங்கில் பிசியானார். தனுஷ் வேறு நாயகிகளுடன் இணைந்து நடித்தார்.  நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் இருவரும் சந்தித்து பேசி உள்ளனர். தனுஷ் சில தினங்களுக்கு முன் சென்னையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி நடந்த விருந்து நிகழ்ச்சியில் தமன்னாவும் பங்கேற்றார். இருவரும் தனியாக நீண்ட நேரம் பேசிக்கொண்டு
இருந்தனர்.
இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், தனுஷ் பிறந்த நாள் கொண்டாடியபோது நான் சென்னையில் இருந்தேன். எனவே விருந்துக்கு போனேன். வேங்கை படத்தில் இருந்து நானும் தனுசும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். தனுஷ் அற்புதமான சிறந்த மனிதர். அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் என்னால் பங்கேற்காமல் இருக்க முடியாது. இருவரும் நிறைய விஷயங்கள் பற்றி பேசினோம், என்று கூறியுள்ளார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்