உச்சத்தின் அனிமேஷன் படத்தின் ஆடியோவை டோக்கியோவில் வெளியிடுவதாக திட்டம். இதில் தல கலந்து கொள்வார் என்று சிலர் தலைகால் புரியாமல் வதந்தி கிளப்பி வருகிறார்கள். சொந்தப் படத்தின் விழாவுக்கே வராதவர் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கா நீர் இறைக்கப் போகிறார் என்று நமட்டு சிரிப்புடன் கிண்டலடிக்கிறார்கள் நடிகரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். என்றாலும் தனது ஆன்மிக குருவின் படவிழா அல்லவா... வருவார் என்கிறார்கள் நம்பிக்கையாக.
பொறுத்திருந்துதான் பார்ப்போம்.