சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் - புதிய தகவல்


கோச்சடையான் ஷூட்டிங் முடித்துவிட்டு தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினி அடுத்ததாக எந்த படத்தில் நடிக்கிறார் எனத் தெரியாத நிலையில் தமிழ்த்திரைத்துறையில் பல செய்திகள் உலா வருகின்றன. சமீபத்தில் இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த ’ஓ மை காட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. பெரிய புயலில் தன் கடையை இழந்துவிடும் ஒருவன் கடவுள் நம்பிக்கையை இழந்து கடவுளை அழிக்க துவங்கும் பயணம் தான்
இந்த படத்தின் கதை. இந்தியில் ஓ மைகாட் படத்தை தயாரித்த அக்‌ஷய் குமார், ரஜினி நடித்தால் தமிழிலும் அவரே தயாரிக்க முன்வருவதாக கூறியிருக்கிறாராம்.  ரஜினி நடித்த பாபா படத்தின் கதையும் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட கதை தான். 

ஆனால் பாபா எதிர்பார்த்த அளவு வெற்றியடையாததால் இந்த படத்தில் ரஜினி நடிப்பாரா? என அவர் தான் சொல்ல வேண்டும். இந்தியில் இந்த படம் பார்த்த ரசிகர்களுக்கு ’கோ கோவிந்தா’ என்ற பாடலுக்கு பிரபுதேவாவும், சோனாக்‌ஷி சின்ஹாவும் போட்ட குத்துபாடல் தமிழில் இருக்குமா என்பதே பெரிய கவலையாக இருக்கிறது. இந்தி திரையுலகின் பிரபல நடிகர் பரேஷ் ரவால் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் ரீமேக்கிலும் அவர் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்