
இ.வி.கணேஷ்பாபு இயக்கும் படம், "யமுனா இயக்குனர் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயிற்சி பெற்ற சத்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ஸ்ரீரம்யா என்ற தெலுங்கு நடிகை,நாயகியாக நடித்துள்ளார். இவர், தேசிய விருது பெற்ற, "1940 லோ ஒக்க கிராமம் என்ற தெலுங்கு படத்தில், மொட்டை அடித்து நடித்ததோடு, ஆந்திராவின் உயரிய விருதான,"நந்தி விருதை பெற்றவர். சால்சா, சாம்பா, பரதநாட்டியம் போன்ற கலைகளிலும் வல்லவரான ஸ்ரீரம்யா, "யமுனா படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.