சுந்தரபாண்டியன் திரை விமர்சனம்


என்னடா படத்தோட ட்ரைலரோ படத்தோட பேரோ கூட அவ்வளவு ஸ்பெஷலா இல்லையே.. சரி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லாம போனா சசி கண்டிப்பா நம்ம ஏமாத்த மாட்டார்னு நம்பி போனேன். உண்மைலேயே சசிகுமாரும், S.R.பிரபாகரும் என்னை நல்லா ஏமாத்திட்டாங்க. பின்ன இதுவரைக்கும் வந்த சசிகுமாரின் படங்களிலேயே சிறந்த படத்தை இப்படியா ரிலீஸ் பண்ணுறது. படத்தோட ரிஷல்ட் என்னனு உங்களுக்ககு புரிந்திருக்கும். 

சமீத்தில் ரிலீஸ் ஆனா படங்கள் சகுனி, பில்லா-2, 18வயசு மற்றும் முகமூடி. நான் எவ்வளவு பாதிக்க பட்டுருக்கேன் என்று இந்த லிஸ்ட பாத்தாலே தெரியும். சரி படத்த பத்தி சொல்லுறேன். கண்டிப்பா கதையை சொல்ல மாட்டேன். ஏன்னா படம் ஆரம்பம் ஆனா கொஞ்ச நேரத்திலே படம் எந்த ரூட்டில் போகும் முடிவு என்னவாக இருக்கும் என்று உங்களால் கணிக்க முடியும், அதுதான் இந்த படத்தின் கதை. பின்ன படத்துல பயங்கர சஷ்பென்ஸ் வச்சுருந்தா மட்டும், நம்ம பிளாக்குல மொத்தத்தையும் போட்டு உடைக்காமலா இருந்திட போறாங்க. அதான் இயக்குனர் நீங்க யூகிக்கிற அளவுலே கதையை செளுத்தியிருக்கார்.

ஆனாலும் இந்த படம் ரொம்ப ஸ்பெஷல். நீங்க எந்த அறுவை சிகிச்சையும் செய்யாம படத்த ரசிக்கனும்னு முடிவு பண்ணி பாத்தீங்கனா அதற்காக படத்தில நெறைய விஷயங்கள் இருக்கு. சசி ரஜினி ரசிகர்னு ஒரேயொரு காட்சியில் வசனம் மட்டும் வருகிறது. அதை வச்சுகிட்டு ஓவர் பில்டப், ஓப்பநின்க் பாடல்னு ஆரம்பமே கலக்கலா இருக்கு. என்ன சசி பாக்கிறதுக்கு சின்ன வயசு T.ராஜேந்தர் மாதிரி இருக்கார். அது ஒன்னும் குறை இல்ல. உசிலம்பட்டியை பற்றிய ஆரம்ப அறிமுகம் இதுவரை நான் கேட்டிராறது. ஆனாலும் தானை தலைவர் மருத்துவர் சீனிவாசனின் படம் உள்ள போஸ்டரை அங்கே ஓட்ட விடாதது அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்.

இந்த படத்திலேயும் நட்பைத்தான் எடுத்திருக்கிறார்கள். ஆனால் வேறொரு கோணத்தில், படத்தின் இறுதி காட்சி வரும் பொழுது இது "தூங்கா நகரம்" படத்தோட கதையாச்சேன்னு நீங்க நினைக்கலாம். ஆனால் அந்த படத்தில கிளைமாக்ஸ்-ங்கிற பேர்ல அந்தர் பல்டி அடிச்சிருப்பாங்க. ஆனால் இதில் ரெம்ப நேர்மையாகவும் பார்வையாளர்களை திருப்தி படுத்தும் விதத்திலும் சொல்ல பட்டிருக்கிறது.

படத்தோட முதல் பகுதில யார் ஹீரோனு பாக்கிறவங்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகத்தான் ஓப்பநின்க் பாடல்னு நினைக்கிறேன். அந்தளவு பிரபாகரனின் ஒன் சைட் காதலையும் அவருக்கு சசியும் "பரோட்டா" சூரியும் உதவுற மாதிரி கதை போகிறது. ஆனாலும் நமக்கு தெரியும் இது ஹீரோயின் அதனால சசியைத்தான் லவ் பண்ணும்னு, அதுல ஒரு ட்விஸ்ட் என்னனா அது ஏற்கனவே சசி லவ்வ சொல்லி மறுத்த பொண்ணு. பிறகு ப்ரண்டுக்குனு போய் பேசும்போது அப்ப நான் மைனர் இப்ப மெச்சுர்ட் ஆகிட்டேன். இப்ப உன்னைத்தான் லவ் பண்ணுறேன்னு சொல்லுற வரைக்கும் கதை சூரியோட காமெடி டயலாக்குல படம் செம. அதன் பிறகு பிரபாகரனின் குறு குறு பார்வை. விஜய் சேதுபதி மற்றும் சில நண்பர்களின் அறிமுகமும் அந்த நண்பர்களுக்குள் சசியின் காதல் சிக்கி கொள்வதும் நம்மை கொஞ்சம் பதற வைக்கிறது.

அப்புக்குட்டியை வில்லனாக பார்க்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் கதையின் நீட்சி அந்த கதாபாத்திரத்தை உயிரோட்டமாக மாற்றுகிறது. கிளைமாக்ஸ் சந்திப்பு எதிர் பார்த்ததுதான் என்றாலும் அதை நேர்மையாகவும் ஹீரோவின் தனித்தன்மையை காட்டுவதாகவும் அவன் மீதுள்ள களங்கத்தை துடைப்பதற்காகவும் பயன்படுத்தியிருப்பது பார்வையாளர்களின் மனதை எளிதில் தொடுகிறது.

இந்த படத்தில நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. ஓவோருவருக்கும் தனித்தன்மையான கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியிருக்கிறார்கள். படத்தின் கருவே கதாநாயகியின் பாத்திரம்தான். அதற்காகத்தான் லக்ஷ்மி மேனனை தேடி பிடித்திருக்கிறார்கள். நல்ல உயரமான, கதாபாத்திரமாகவே வாழ தெரிந்த நம்ம ஊரு பெண் போல இருக்கும் நடிகை. எனக்கு இப்பவே "கும்கி" பாக்கனும்னு ஆசை வந்திருச்சு. அந்தளவு என்னை பாதித்தது அவரது நடிப்பு. சசிகுமார், லக்ஷ்மி மேனன், சூரி, அப்புக்குட்டி, பிரபாகர், விஜய் சேதுபதி, தென்னவன், நரேன், துளசி, நீது, அரவிந்த் என்று ஒவ்வொரு பாத்திரமும் அருமை.

அப்படின்னா படத்துல குறையே இல்லையானா, இருக்கு. நாம் ஆரம்பத்துல யூகிக்கிற எல்லா விஷயமும் படத்துல தொடர்ந்து வருது ஆனாலும் நாம் நினைச்சு பார்க்காத திசையிலெல்லாம் கதை பயணிக்கிறது. நாடோடிகள் போலவே பரபரப்பான கிளைமேக்ஸ் அதை போலவே ட்விஸ்ட் + கைத்தட்டல் வாங்குகிற வசனம்.

படத்துல கடைசியா சூரி, டீக்கடையில இருக்கிற ஆள் கிட்ட.... "நாங்க எப்படி வேணும்னாலும் கூட்டிட்டு போவோம் அதையெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது" என்கிறார். அதற்கு தியேட்டரில் இருந்த எல்லோரும் சிரிக்கிறார்கள். யோசித்து பார்த்தால் அது ரொம்ப சாதாரணமான வசனம், அதற்கு ஏன் சிரிக்கிறார்கள் என்றால், ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. படம் முழுவதுமே சூரி பேசுகிற வசனமும் அவருடைய ரியாக்ஷனும் சாதாரணமானதுதான், ஆனாலும் நம்மை முழுவதுமாக ஒன்ற செய்கிற கதை என்பதால் நம்மால் மனம் விட்டு சிரிக்க முடியும்.

படத்தின் கதை திரும்பும் போதெல்லாம் நம்மையும் அதோடு பயணிக்க இயக்குனர் சிறப்பான டெக்னிக்கை பயன்படித்தியிருக்கிறார். அதை  கதாபாத்திரங்களின் நடிப்பாலேயே சாதித்திருக்கிறார். பிரபாகரின் திருட்டு பார்வை அவர் துரோகி ஆவார் என்று கட்டுகிறது. சசியின் தந்தை நரேனின் கம்பீரம், காதலை கதாநாயகியின் தந்தையை ஏற்றுகொள்ள வைக்கிறது. முக்கியமான ஒன்று, கதாநாயகியை அவளது அக்காள் கொழுந்தனுக்கு கட்டி கொடுக்கா விட்டால், அக்கா வாழாவெட்டியாக இருக்க வேண்டும் என்கிற ரீதியில் கதையில் டென்ஷனை ஏற்றிவிட்டு, கடைசியில் அக்காவின் மிரட்டலில்...... அவரது  கணவன் அவளுக்கு கட்டுப்பட்டவன் என்று காட்டி அந்த டென்ஷனை குறைக்கிறார் இயக்குனர்.

ரகுநந்தன் இசையில் எல்லா பாடல்களும் அருமை. G.V.பிரகாஷ் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாட்டு இன்னும் நல்லா கொண்டு வந்திருக்கலாம். பிரேம் குமார் ஒளிப்பதிவு அருமை, குறிப்பா அந்த கள்ளிக்காடு. நான் 2D டிஜிட்டலில் பார்த்தேன், பாடல் காட்சிகள் அருமையாக இருந்தது.  

டிரைலர் சிறப்பா இல்லையேனு நினைச்சு ஏமாந்து இருந்திராதீங்க, யதார்த்த படங்களில் பாசிடிவ் அப்ரோச் பெரும்பாலும் செட் ஆகாது. ஆனால் முழுக்க முழுக்க பாசிடிவான ஒரு யதார்த்த படம்தான் இந்த சுந்தர பாண்டியன்.

அண்ணாமலை, முத்து வரிசையில் இந்த சுந்தரபாண்டியன் பெயரும் புகழ் பெரும்.

ஆமா, அந்த ஒப்நின்க் சீனில் கள்ளிக்காட்டில், பெண் பிள்ளைகளை கெடுத்தவர்களுக்கு இங்கு மரண தண்டனை கொடுக்கப் படும் என்கிற ரீதியில் பில்டப் கொடுத்தாங்களே அது எதுக்கு. அந்த கள்ளிக்காட்டை வெறும் கொலைக்கலாமாக காட்டியிருக்கலாம். அந்த கொலைகாரர்களை கூலிக்கு கொலை செய்பவர்களாக காட்டியிருக்கலாம். இது போன்ற சில நெருடல்கள் படத்தில் இருந்தாலும் யதார்த்த பொழுதுபோக்கு என்கிற மைல்கல்லை இந்த படம் தொட்டுவிட்டதாகத்தான் உணர்கிறேன்.

நன்றி - குவைத் சபா
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget