தூக்கத்தைக் பறிக்கும் செல் போன்

நீங்கள் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா? அதற்கு காரணம் நீங்கள் படுக்கையில் செல்போன் மற்றும் டேப்லெட்டுகளை பயன்படுத்துவதாக இருக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக செல்போனைப் பயன்படுத்தினால்கூட அது தூக்கத்தைப் பாதிக்கும் என்று அமெரிக்காவின் டெய்லி மெயில். அதற்கு காரணம் மெலடோனின் பிரச்சினை என்று லைட்டிங் ரிசர்ச் சென்டரில் இருந்து வரும் ஆய்வு கூறுகிறது.
இந்த மெலடோனின் என்பது உடலைக்
கட்டுப்படுத்தும் ஒருவித வேதிப் பொருளாகும். குறிப்பாக பதின்பருவத்தில் இருக்கும் இளையோர் பெரும்பாலும் இந்த பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
அதாவது தொடர்ந்து 2 மணி நேரம் ஒளி வரும் டிஸ்ப்ளேயில் கவனம் செலுத்தினால் அது 22 சதவீத அளவிற்கு மெலடோனினைக் கட்டுப்படுத்தும் என்று மரியானா பிகேரியோ என்ற பேராசிரியர் கூறுகிறார். அதனால் இது தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்.
எனவே தூக்கத்திற்கு முன் செல்போனைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget