இளமை ஊஞ்சல் சினிமா பார்வை

நடிகர்கள்:  நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி
இசை:  கார்த்திக் பூபதி ராஜா
ஒளிப்பதிவு:  ஜே.ஜி கிருஷ்ணன்.
இயக்கம்:  மங்கை அரிராஜன்
தயாரிப்பு:  எஸ்.ஆர். மனோகரன்

ஸ்ரீ ப்ரியம் கிரியேஷன்ஸ் என்னும் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'இளமை ஊஞ்சல்'.

அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் திகில் படம் இது. திடுக்கிடும் சம்பவங்களும், கவர்ச்சி காட்சிகளும், மர்ம முடிச்சுகளும், எதிர்பாராத திருப்பங்களும், சஸ்பென்ஸும் நிறைந்த இந்தப் படத்தில் நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி ஆகிய நடிகைகள் படம் முழுக்க இளமை விருந்து படைக்கிறார்கள்.



இந்தப் படத்தின் கதைக்கு கட்டாயம் கவர்ச்சி  தேவை என்பதால், இதில் நடித்திருக்கும் நடிகைகள் கதையின் தன்மையைப் புரிந்து கொண்டு, காட்சிகளுடன் முழுமையாக ஒன்றிப் போய், படம் பார்ப்போரைக் கிறங்க வைக்கும் அளவிற்கு தங்களின் உடலழகை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒகனேக்கல், பெங்களூர், மைசூர், ஹைதராபாத், மூணாறு ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

கார்த்திக்பூபதிராஜா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கவிஞர் பிறைசூடன் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு : ஜே.ஜி கிருஷ்ணன். முடிவடையும் நிலையில் இருக்கும் இந்த இளமை ததும்பும் படத்தை பிரபல பட வினியோகஸ்தர் எஸ்.ஆர். மனோகரன் தயாரிக்கிறார். மங்கை அரிராஜன் கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்