ஜனவரி மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உடன்பிறந்தவர்கள் உங்களின்
உண்மையான பாசத்தை உணர்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பள்ளி, கல்லூரி கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.
அவ்வப்போது தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்கள் வந்து விலகும். தலைவலி, கண் எரிச்சல் வந்து நீங்கும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். கௌரவப் பதவிகள் தேடி வரும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கோவில் பஜனைகளில் பங்கேற்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். புது வாய்ப்புகள் வரும். கலைத்துறையினர்களே! வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். தொட்ட காரியங்கள் துலங்கும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 7, 9, 11, 14, 15, 21, 26
அதிர்ஷ்ட எண்கள் : 2, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளிர்நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, புதன்
ஜனவரி மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.
வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் செலவு, சலிப்பு, சோர்வு, உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும்.
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனைவிவழியில் நல்ல செய்திகள் வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். சகோதரிக்கு வேலைக் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள்.
வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகள் வெளிப்படும். புது முயற்சிகளில் வெற்றி பெறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 2, 6, 9, 10, 15, 17, 20, 25
அதிர்ஷ்ட எண்கள் : 3, 5
அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, க்ரீம் வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், சனி
ஜனவரி மாத எண் ஜோதிடம் : 3, 12, 21, 30
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் வி. ஐ. பிகளின் ஆதரவால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வங்கிக் கடன் பெற்று குடியிருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் கட்டுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
வழக்கு சாதகமாகும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி கிட்டும். பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். தொண்டை புகைச்சல், காய்ச்சல் வந்து நீங்கும். மனைவியுடன் மனத்தாங்கல் வரும்.
சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போவது நல்லது. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவதால் மன அமைதி கிட்டும்.
வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவான பேச்சால் நிம்மதியடைவீர்கள். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த வாய்ப்புகள் தள்ளிப் போகும். வளைந்துக் கொடுக்க வேண்டிய மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 4, 9, 11, 13, 14, 22, 26, 28
அதிர்ஷ்ட எண்கள் : 1, 6
அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், சில்வர் கிரே
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வெள்ளி
ஜனவரி மாத எண் ஜோதிடம் : 4, 13, 22, 31
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.
கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள்.
சகோதர வகையில் அனுகூலம் உண்டு. மனைவிவழி உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அவ்வப்போது வீண் டென்ஷன், நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அரசியலில் செல்வாக்குக் கூடும்.
வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 5, 8, 10, 15, 16, 22, 25
அதிர்ஷ்ட எண்கள் : 2, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, திங்கள்
ஜனவரி மாத எண் ஜோதிடம் : 5, 14, 23
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதிலிருந்த தேக்க நிலை மாறும்.
பழைய கடன் பிரச்சனையை தீர்க்க புது வழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும். உடல் ஆரோக்கியம் சீராகும். இளைய சகோதரருடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு கலைக்கட்டும்.
பேச்சில் நிதானம் அவசியம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சித்தர்கள், மகான்களை சந்தித்து ஆசிப் பெறுவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. கமிஷன், ஷேர் மூலம் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினர்களே! பழைய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். மூளை பலத்தால் முன்னேறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 2, 7, 9, 11, 16, 18, 19, 27
அதிர்ஷ்ட எண்கள் : 4, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வெள்ளி
ஜனவரி மாத எண் ஜோதிடம் : 6, 15, 24
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் குடும்பத்தில் அமைதி நிலவும். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல இடத்தில் வரன் அமையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வீட்டில் கழிவு நீர், குடிநீர் பிரச்சனை தீரும். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், சளித் தொந்தரவு, மனதில் இனம்புரியாத பயம் வந்து நீங்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். பிள்ளைகளால் அலைச்சல், மனக்குழப்பம் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் விவாதம் வந்துப் போகும்.
வாகனம் பழுதாகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினர்களே! கிடைக்கின்ற வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள். தடைகள் உடைபடும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 4, 5, 12, 14, 19, 22, 25
அதிர்ஷ்ட எண்கள் : 6, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், பிஸ்தாபச்சை
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி
ஜனவரி மாத எண் ஜோதிடம் : 7, 16, 25
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தொட்ட காரியம் துலங்கும். கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள்.
உங்கள் ரசனைக் கேற்ற சொத்து வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவப் பதவிகள் தேடி வரும். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். தள்ளிப் போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். அதிகாரிகளின் நட்பு கிட்டும். வேற்று இனத்தவர்களால் உதவிகள் கிடைக்கும்.
அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை, வீண் பழி, செலவுகள் வந்துப் போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். கலைத்துறையினர்களே! புதிய வாய்ப்புகள் வரும். சிக்கனம் தேவைப்படும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 7, 9, 13, 15, 18, 20, 28, 29
அதிர்ஷ்ட எண்கள் : 5, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், வெள்ளி
ஜனவரி மாத எண் ஜோதிடம் : 8, 17, 26
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். பேச்சில் இருந்த தடுமாற்றம் நீங்கும். பணவரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் ஒத்தாசையாக இருப்பார்கள். மகளின் திருமணத்தை கோலாகலமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். புது வண்டி வாங்குவீர்கள். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது மனை வாங்க முன் பணம் தருவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டிற்கு குடிபுகுவீர்கள்.
வெளிவட்டாரத்தில் இருந்த அலைச்சல் நீங்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். அவ்வப்போது பழைய பிரச்சனைகள் தலைதூக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 4, 5, 8, 11, 14, 18, 24, 30
அதிர்ஷ்ட எண்கள் : 1, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், மயில் நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன்
ஜனவரி மாத எண் ஜோதிடம் : 9, 18, 27
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புது வேலைக் கிடைக்கும். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.
வி.ஐ.பி.களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும்-. பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் வலிய வந்து உதவுவார்கள். அடகு வைத்திருந்த ஆபரணங்களை மீட்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். அவ்வப்போது வீண் டென்ஷன், சிறுசிறு விபத்துகள் வந்துப் போகும்.
தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினர்களே! இழந்த புகழை மீண்டும் பெற எதார்த்தமான படைப்புகளை கொடுக்கப்பாருங்கள். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 7, 9, 10, 12, 14, 16, 19, 29
அதிர்ஷ்ட எண்கள் : 2, 3
அதிர்ஷ்ட நிறங்கள் : பழுப்பு, ஆலிவ்பச்சை
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வெள்ளி