
தப்பு தாளங்கள் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சரிதா. 'தண்ணீர் தண்ணீர்', 'மவுன கீதங்கள்', 'வண்டி சக்கரம்', 'மலையூர் மம்பட்டியான்', 'அக்னி சாட்சி' உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். சமீப காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இவர் கடைசியாக ஜூலி கணபதி’ என்ற படத்தில் ஜெயராமோடு இணைந்து நடித்திருந்தார். தன்னுடைய கணவரான மலையாள நடிகர் முகேசையும் விவாகரத்து செய்து விட்டார்.
இந்நிலையில் தற்போது சொந்தமாக படம் தயாரித்து அதில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார். இந்த படத்திற்கான பூஜை இன்று ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. இப்படத்தின் பெயர் இன்னும் வைக்கவில்லை.
இப்பட பூஜையில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ், நடிகர் பிரபு, பழைய நடிகை ராதா, நடிகை மந்த்ரா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படத்தின் முதல் காட்சிக்கு பாக்யராஜ் கிளாப் அடிக்க கே.பாலச்சந்தர் காட்சியை படம்பிடித்து படத்தை துவங்கி வைத்தனர்.
இப்படத்தில் சரிதாவுடன் பிரபுவும் இணைந்து நடிக்க உள்ளார்.