
காஜல் அகர்வால், ஒரு படப்பிடிப்பு தளத்துக்குள் என்ட்ரி ஆனாலே, அவர் பின்னால் ஒரு கூட்டமே திரண்டு வருகிறது. இவர்களெல்லாம் யார் என்று விசாரித்தால், அத்தனை பேரும், அவரது உதவியாளர்கள் என்கின்றனர். பல மொழிகளிலும், பரவலாக நடிப்பதால், ஓடியாடி வேலை செய்ய குறைந்தது எட்டு பேராவது காஜலுக்கு தேவைப்படுவதாக கூறி, கூடவே அழைத்து வந்து விடுகிறார். அறுக்க மாட்டாதவன் இடையில் அம்பத்தெட்டு கருக்கரிவாள்!