ஸ்ருதி ஹாசன், தெலுங்கில் நடித்த, "காபர் சிங் படம், பரபரப்பாக ஓடி வசூலை குவித்தது. இந்த படத்தில், "பாக்கியலெட்சுமி என்ற கதாபாத்திரத்தில், கிராமத்து பெண்ணாக அவர் நடித்திருந்தார். இதனால், தெலுங்கு ரசிகர்கள் அவரை எங்கு பார்த்தாலும், "பாக்கியலெட்சுமி என்று தான், அன்புடன் அழைக்கின்றனராம். இதைத் தொடர்ந்து, தற்போது, "யெவடு என்ற, மற்றொரு படத்தில், நடிக்க, ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதில், முந்தைய படத்தில் நடித்த கேரக்டருக்கு, முற்றிலும் மாறுபட்டதாக, "அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக
நடிக்கப் போகிறாராம். "பாக்கியலட்சுமி கேரக்டர் போன்றே, இந்த அல்ட்ரா மாடர்ன் கேரக்டரும், ஆந்திர ரசிகர்களை, பெரிதும் கவரும் என, நம்பிக்கை தெரிவித்துள்ள, ஸ்ருதி, "யெவடு படத்தின் வெற்றியை, பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்த படத்தில், முதலில் சமந்தா தான், நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் நடந்த மாற்றத்தால், சமந்தாவிடமிருந்து அந்த வாய்ப்பு, ஸ்ருதிக்கு கை மாறியுள்ளது.